236
மறைமலையம் -6 *
தவத்தோர்க்குப் புறத்தேயும் அதனை நோக்கி நிற்றலே அகத்துக் கொண்ட நாட்டம் பிறழாதிருத்தற்குப் பேருதவி யாதலால் அவர் கதிரவனொளியை நோக்கித் தவம்புரிதல் இன்றியமையாத தாயிற்று. எனவே, அகத்து வைத்த நாட்டம் எத்துணைதான் உறைத்து நிற்பினும் புறத்து நாட்டம் அதற்கு மாறானதொன்றிற் படின் தான் கலைந்துபடு மென்பதும், அகமும் புறமும் ஒத்த ஒரு குறியே கருத்தினை ஒருவழி நிறுத்துதற்கப் பெருந்துணையா மென்பதும், இது பற்றியே ஆங்காங்குத் திருக்கோயில்களும் அவற்றினுள்ளே ஒளியின் அடையாளமான அருட் குறிகளும் ஆன்றோரால் அமைத்து வைக்கப்பட்டன வென்பதும் நன்குணரப்படும்.
-
கலினம் கடிவாளம். தவப்பள்ளி - முனிவர் தவம்புரியும் உறையுள். வாவி - குளம்.
(பாட்டு) வேட்பன
-றனவே.
(பக். 134) இதன் பொருள் : வேட்பன தரும் கற்பகம் பொதுளிய அடவியிலிருந்தும் - விரும்பிக் கேட்பவைகளை யெல்லாங் கொடுக்குங் கற்பகமரங்கள் நிறைந்த காட்டின் கண் இருந்தும், 'மற்று’: அசைநிலை; அல்லது, அவைகளை ஏதும் விரும்பிக் கேளாதவராய் என்று வினைமாற்றுப் பொருள்பட உரைப்பினும் ஆம்; இவர் ஆர்வது நடைபெறும் தூயவளியே இவர் அருந்துவதோ இயங்குகின்ற தூய்மை யான காற்றாய் இருக்கின்றது, முடவுஇதழ்ப் பொன்தாமரையின் நல்தாது குதலின் பழுப்பு உருத்தோற்றும் விழுத்தட நீரே - வளைந்த இதழ்களையுடைய செம்பொன் நிறமான தாமரை மலர்களின் நல்ல துகள் சொரிதலினாலே பழுப்பான நிறத்தைக் காட்டுஞ் சிறந்த குளங்களின் நீரே, பொழுது மாறாது இவர் முழுகு தீம்புனலே - சிறு பொழுதுகள் தோறும் மாறாமல் இவர் ஆடும் இன்சுவைத் தண்ணீரா யிருக்கின்றது, வீழ்ந்து ஒரு குறியில் ஆழ்ந்து இவர் இருப்பதும் - விரும்பி ஓர் அடையாளத்தின் கண்ணே நினைவுபதிந்து இவர் இருப்பதற்கு இடமாவதும்; விளக்கம் வாய்ந்த மணிக்கல் மிசையே - துலக்கம் பொருந்திய இரத்தினக் கற்களின் மேலாகவே இருக்கின்றது, அரம்பை