238
மறைமலையம் 6
இதழ்களின் மேல்முனைகள் மட்டுந் தனித்தனியே காணப் பட்டு அடிப் பகுதியெல்லாம் இடைவெளியின்றி நெருங்கி நிற்றலான். அங்ஙனமே விரல் முனைகள் மட்டுந் தனித்தனியே காணப்பட்டு அடிவிரல்கள் நெருங்கி அகஞ் சிவந்திருக்குஞ் சர்வதமனன் கைகளுக்கு அஃது உவமையாயிற்று.
(பக். 137) ‘சுவரதை' என்பாள் காசியபர் உறையுளின் கண் உள்ள முனிவர் மகளிருள் ஒருத்தி, தீட்டுதல் - சாயம் ஏற்றுதல். குடில் - சிறிய இல். மகார் - பிள்ளைகள்.
-
(பக். 138) படுதல் மட்டால் படுதல் அளவிலே.
-
-
-
-
(பக். 139) நோன்பு (வடசொல்) விரதம். கண்ணம் வெள்ளிய நீறு. தீற்றல் - பூசுதல். பணிஆற்ற ஏவியதுசெய்ய. பண்டைக்காலத் தரசர்கள் தம் வாழ்நாளிற் பாதியை அரசியலிற் கழித்தபின், தமதரசைத் தம் மக்கட்குக் கொடுத்துவிட்டுத் தாம் தம் மனைவிமாருடன் கானகத்திற் சென்று வைகித் தவம் புரிதல் மரபு.
-
உசாவல் - கேட்டு ஆராய்தல். நேர்மை தகுதி.
(பக். 140) 'சகுந்தலை' என்பதற்குப் பறவை என்றும், 'லாவண்யம்' என்பதற்கு அழகு என்றும் பொருளுண்டா கலின், அச்சொற்கள் இரண்டையுஞ் சேர்த்துத் துறவிமகள் சொல்லுமாற்றாற், சகுந்தலையைக் கொணர்ந்து தொடர்பு படுத்துதற்கு இந்நாடக ஆசிரியர் ஈண்டுக் காட்டுஞ் சூழ்ச்சித் திறனைக் காண்க. காப்பு - (வடசொல்) ரட்சை. கரண்டகம் - செப்பு.
-
(பக்.141) அபராஜிதை வெல்லப்படாதது. பூண்டு - செடி. 'பிறவிச்சடங்கு’ இதனை ‘ஜாதகர்மம்’ என்ப வடநூலார்; அது பிறந்த மகவுக்குத் தொப்புள் அறுக்கும் முன், தந்தையாயினான் ஒரு பொற்கரண்டியிற் சிறிது வெண்ணெயுந் தேனும் எடுத்து அம்மகவின் வாயிற் பெய்வதாகும் என்று மனுமிருதி (2,27) நுவல்கின்றது. நல்கல் - கொடுத்தல்.
(பக். 142) துஷியந்தனால் விலக்கப்பட்ட காலத்திற் பின்னிய சடையைச் சகுந்தலை அவிழ்த்துச் சீவித் திரும்பப்