பக்கம்:மறைமலையம் 6.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

6

239

பின்னலிடாமையின் “ஒரே முறை பின்னப்பட்ட சடையோடு சகுந்தலை வருகின்றாள்" என்றார். கணவனைப் பிரிந்து கற்புடை மனைவியர் இவ்வாறு ஒப்பனையின்றி அழுக்கேறிய துயர வாழ்க்கையினராய் நோன்பு மேற்கொண்டிருத்தல் பண்டை வழக்கம்.

கழிவிரக்கம்

வருந்துதல்.

-

முன்னேசெய்த பிழையை நினைந்து

-

L

(பக். 143) எந்து எழில் மிக்க அழகு. 'உரோகிE' என்பவள் தக்கன் புதல்வியர் இருபத்தெழுவரிற் சந்திரன் பால் மிக்க அன்புடையவள் என்றும், அவனுந் தன் மனைவிமாரான அவ்விருபத்தெழுவரில் உரோகிணியிடத்து மட்டுமே

கழிபெருங் காதலுடையனாய் ஒழுகினன் என்றும், அதுகண்ட தக்கன் தன் புதல்விமா ரெல்லாரிடத்தும் ஒரு பெற்றித்தான அன்புவையாதது பற்றிச் சந்திரனை ஒளிமழுங்குகவெனச் சபித்தனனென்றும், அச் சாபம் ஏற்ற சந்திரன் சிவபிரானை வேண்டித் தவங்கிடந்து மீண்டுந் தன் ஒளி தேய்ந்து ளி வளரப்பெற்றன னென்றும் புராணங்கூறும், இராகுவால் விழுங்கப்பட்ட சந்திரனைப் பிரிந்திருந்த உரோகிணி, அஃதவனைக் கக்கியபின் அவன்பாற் சென்று சேர்ந்தாற் போல, மறதியால் விழுங்கப்பட்டிருந்த துஷியந்தனை அது விட்டு நீங்கியபிற் சகுந்தலை அவனை வந்து அடைந்தனள் என்றார்.

-

மிடறு தொண்டை. இங்குலிகம் - மிகச் சிவந்த நிறத்தின தாகிய சாதிலிங்கம். ஊட்டுதல் - தோய்வித்தல். கணவனொடு கூடிவாழும் மகளிர் தம் இதழ்களின் இயற்கைச் சிவப்பு நிறத்தை மிகுதிப்படுத்தல் வேண்டி அவற்றிற்கு இங்குலிகம் ஊட்டுதல்அஞ்ஞான்றை வழக்கம். சகுந்தலை தன் கணவனைப் பிரிந்திருந்தமையால் அவ்வாறு செய்தியற்றிலள். 'மலகுணம்’ ஆணவமலத்தின் மறைக்குங் குணம். அறவினை - தர்மச்செயல். (பாட்டு) பேதைமை

மயிலே.

(பக் 144) இதன் பொருள் : பேதைமைதன்னால் அறியாமையினால், மாதை நான் நீக்க - மங்கையாகிய நின்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/270&oldid=1577753" இலிருந்து மீள்விக்கப்பட்டது