சாகுந்தல நாடகம்
241
(பக். 146) இறைமகன் - தலைமகன். தேவர்க்கு அரசனாதல் பற்றி வேள்விக்கட் கொடுக்கும் பலியில் முதற்கூறு இந்திரனுக்குரிய தென்றான். “தானே யுண்டாவதான பரம் பொருள்” என்றது ஈண்டு நான்முகக் கடவுளை; அந் நான்முகக் கடவுட்கும் மேலான புருடன் என்றது விண்டுவை; அதிதி காசியபருக்கு மகனாய்ப் பிறந்த வாமநன் விண்டுவின் பிறவியாதல்பற்றி விண்டுவுக்கு அவ் விருவரும் பிறப்பிட மானவ ரென்றான்.
சயந்தன் - இந்திரன் மகன்.
(பக் 147) ‘பிரஜாபதி' என்பது உயிர்கட்கு இறைவன் என்னும் பொருட்டு. இச்சொல் வேதங்களில் இந்திரன், சாவித்திரி, சோமன், இருணியகருப்பன் முதலாயினார்க்குப் பெயராக வழங்கப்படுகின்றது; மனுவில் இது நான் முகனுக்குப் பெயராக நுவலப்படுகின்றது; இன்னும் இது சுவாயம்புவமனுவுக்கும் பெயராக இருக்கின்றது; பின்னும் இது மரீசி, அத்திரி, அங்கிரசர், புலத்தியர், புலகர், கிரது, வசிட்டர், பிரசேதர், பிருகு, நாரதர்க்கும் பெயராக வழங்கு கின்றது; இங்கே இச்சொல் மாரீசர் மேற்று ‘வீசிமுறை’ என்பது உயிர்களின் ஊழ்வினைப் பயனை நுகர்விக்குந் தெய்வம்.
6
-
பெண்,
பெண்ணை
கார் -முகில், (வடமொழி) மேகம். மடந்தை பதினான்கு முதற் பத்தொன்பதாண்டுள்ள மடந்தையென்றால் தமிழ்வழக்கு. 'கண்ணுவர்’ காசியப் குலத்தைச் சேர்ந்தவரென்று மாபாரதங் கூறும்.
எ
(பக். 148) தவறு இழைத்தல் - குற்றஞ் செய்தல், புதுமை (வடமொழி); ஆச்சரியம். அடிச்சுவடுஅடியழுந்தின அடை யாளம். துணிவு - தெளிவு. அப்பெற்றித்து - அத் தன்மையது. பேதை - கள்ளம் அறியாதவள்.
‘தவக்காட்சி' இன்னதென்பதனைச்,
66
சமாதியான் மலங்கள் வாட்டிப் பொருந்திய தேசகால இயல்பு அகல் பொருள்கள் எல்லாம் இருந்து உணர்கின்ற ஞானம் யோகநற் காண்டல் ஆமே"
—