பக்கம்:மறைமலையம் 6.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் 6

என்னும் சிவஞானசித்தித் திருச்செய்யுளால் (அளவை,7) உணர்ந்து கொள்க. வறிது - வெறுமை.

(பக்.149) இடையே தெற்றுப்பட்டு -நடுவே தடுக்கப் பட்டு. இங்கே குறிக்கப்பட்ட தேராவது கடன்மேலும்மலை மேலும் படாமல் வானின்கட் செல்லும் வானவூர்தி. இந்நிலவுலக மானது, சம்புத்தீவு, பிலட்சத்தீவு, சான்மலித்தீவு, குசத்தீவு, கிரௌஞ்சத்தீவு, சாகத்தீவு, புஷ்கரத்தீவு என்னும் ஏழு தீவகங்களாகப் பிரிக்கப்பட்டுளதென்றும், இவற்றை முறையே உப்புக் கடலுங் கருப்பஞ்சாற்றுக் கடலுந் தேன் கடலும் நெய்க்கடலுந் தயிர்க்கடலும் பாற்கடலும் நல்ல தண்ணீர்க் கடலுஞ் சூழ்ந்திருக்குமென்றும் விண்டுபுராணங் கூறும். துஷியந்தன் மகன் பரதனே, குருநிலத்திற் பதினெட்டு நாட் கடும்போர் மலைந்த பாண்டவர் கௌரவர்க்கு மூதாதை யாவன்.அடிகள் (வடமொழி) சுவாமிகள்.புனிதம்(வடமொழி) பரிசுத்தம். எய்த - அடைய. மேனகை என்னிடத்திலேயே தொண்டு செய்து கொண்டிருப்பளாதலால் அவளுக்கு இச் செய்திகளை அறிவிக்க வேண்டுவதில்லையென அதிதியார் கூறினார்.

-

(பக்.150) சினவாது - கோபியாது.

கட்டளை - (வடமொழி) உத்தரவு.

-

(பக். 151) வேட்டல் - வேள்வி வளர்த்தல். துறக்க நாட்டினர் வானுலகத்துள்ள தேவர்கள். உவப்பித்தல் மகிழ்வித்தல். ஊழி - (வடமொழி) யுகம். இதன் திறத்து - இவ்வகையில்.

ஒரு நாடக முடிவின் கட் சொல்லப்படும் வாழ்த்துரை யானது ‘பரதவாக்கியம்' என்று வடநூலின் கட் சொல்லப் படும்; ஏனென்றாற், பண்டைக்காலத்தில் முதன்முதல் இசைநாடகங்களைத் தோற்றுவித்த ஆசிரியன் ‘பரதன்' என்ற பயருடை யனாதலால், அவனை நினைவு கூர்தற்கு அடையாளமாக, நாடகத் தலைவனாய் நின்றான் ஒருவன் நாடகமுடிவின்கட் சொல்லும் வாழ்த்துரை அவ்வாசிரியன் பெயரால் வழங்கப்படுவதாயிற் றென்க. 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/273&oldid=1577756" இலிருந்து மீள்விக்கப்பட்டது