பக்கம்:மறைமலையம் 6.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் 6 *

நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைத் தனித்தமிழக் காலமெனவும், கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சமணகால மேனவும், ஏழாம் நூற்றாண்டு முதற் பதினான்காம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சைவ வைணவ காலமெனவும், பதினான்காம் நூற்றாண்டு முதற் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைப் புத்த காலமெனவும், நான்காம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சமணகால மெனவும், ஏழாம் நூற்றாண்டு முதற் பதினான்காம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சைவ வைணவ காலமெனவும், பதினான்காம் நூற்றாண்டு முதற் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைப் பார்ப்பன காலமெனவும், பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இதுகாறுஞ் சென்ற காலத்தை ஆங்கில காலமெனவும் கூறுதல் இழுக்காமை, அவ்வறுவகைக் காலங்களில் தோன்றிய நூல்களை நன்கு ஆராயுமுகத்தால் தெளியலாம் (பக் 223) என அடிகளார் விளக்கியுள்ளமை, இலக்கிய வரலாற்றைத் தெளிவுபட அறிந்திருந்தமையை நன்கு உணர்த்துகிறது.

நிலத்தினைத் துருவித்துருவி ஆயும் நிலநூலார் போல, தமிழ் நூல்களைத் துருவித்துருவி ஆய்ந்தவர் அவர். இதனை அவரே, ‘நிலநூலார் நிலத்தினைத் துருவி அதன் கீழுள்ள பற்பல படைகளையும், அவ்வப் படைகளிற் புதைந்து கிடக்கும் பற்பல பொருள்களையும் ஆராய்ந்து பார்த்து, அவ்வப்படைகள் உண்டான காலத்தையும், அவற்றில் உலவிய உயிர்கள், அவ்வுயிர்கள் வழங்கிய பண்டங்கள், அப் பண்டங்களிலிருந்த மரஞ்செடி கொடிகள் முதலியவற்றையுமெல்லாம் வழுவாமல் விளக்கிக் காட்டுதல் போலத் தமிழ் நூலாராய்ச்சி செய்வோரும், தனித்தமிழ் உண்டானது முதல் இதுவரையிற் போந்த காலத்தையும் துருவிப் பார்ப்பாராயின், அது பல படைகளாகப் பிரிந்திருக்கவும், அப் படைகளிற் புதைந்து கிடக்கும் தமிழ் நூல்கள் அவ்வக் காலாப் படையின் இயல்பையும், அஞ்ஞான்று உலவிய மக்களியல்பையும் தெற்றெனக் காட்டவுங் காண்பார்கள்' (பக். 222-223) எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/281&oldid=1577765" இலிருந்து மீள்விக்கப்பட்டது