பக்கம்:மறைமலையம் 6.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் -6

வரைகின்றனர். அவா, ஆவல், விழுப்பம் என்னுந் தமிழ்ச் சொற்களிருப்ப அவற்றை விட்டு ‘ஆசை’ ஆசை' என்றும், சொல், கட்டாயம், ஒலி, ஓசை, மொழி, அறிவு நூல், கலை நூல், புலவர், அறிஞர், கற்றார், நேரம், உதவி, பொருள், திருநீறு, சிவமணி, எல்லாம், ஓவியம், முறை, ஒழுங்கு, சிறிது, நினைத்து, ஆழ்ந்து, ஆராய்ந்து, அன்பு, மகன், ஆண்மகன், ஆடவன், ஆள், முதன்மை, வலம்வருதல், வணக்கம் செலுத்துதல் என்னுந் தூய தமிழ்ச் சொற்களிருப்ப, இவற்றை யெல்லாம் விடுத்து, பதம், வாக்கு, வார்த்தை, அவசியம், சப்தம், பாஷை, விஞ்ஞானம், பண்டிதர், சமயம், உபவிஷயம், விபூதி, உருத்ராட்சம், சகலம், படம், நியாயம், கிரமம், கொஞ்சம், யோசித்து, தயவு, மனிதன், முக்கியம், திக்குவிஜயம், தண்டம், சமர்ப்பித்தல் முதலான வடசொற்களைக் கலந்து எழுதுகின்றனர். தமிழ்ச் சொற்களை

வெட்டி வீழ்த்தி வடசொற்களைக் காண்டு வந்து

விதைப்பதுதானா தமிழை வளர்ப்பது? நன்றாக எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

எம் ஆசிரியர் (சோமசுந்தர நாயகரவர்கள்) ‘உன் தனித் தமிழைப் படிக்கப் படிக்க என் செவிகளுக்கு இன்பமா யிருக்கிறது. தனித் தமிழில் எழுதுவதை விடாதே. நீ தனித் தமிழிலே எழுதுவது எனக்கு விழிப்பையும் கிளர்ச்சியையும் உண்டு பண்ணுகிறது' என்று கூறினார்.

மற்றை மொழியின் உதவியை வேண்டாது தனித்து இயங்க வல்ல சொல்வளமும் பொருட் செழுமையுமுடைய நம் செந்தமிழ் மொழியை அதற்கே உரிய சொற்களால் வழங்காமல் அயல்மொழிச் சொற்களை இடையிடையே நுழைத்து அதன் அழகையும் வலிமையையும் சிதைத்தல் பெரியதொரு குற்றமாமென உணரலானேம்; இன்றியமையாது வேண்டப் பட்டாலன்றித் தமிழில் பிற சொற்களைப் புகுத்தல் நிரம்பவும் பிழைபாடுடைத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/291&oldid=1577775" இலிருந்து மீள்விக்கப்பட்டது