பக்கம்:மறைமலையம் 6.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

265

ஆரிய நூல்களில் வகுத்துச் சொல்லப்பட்ட ‘பிராமணர்’ சத்திரியர்' 'வைசியர்' 'சூத்திரர்” என்றாவது சொல்லிக் காள்ளலாகாது.

சைவ அவைகளும் தமிழ்க் கழகங்களும் வைத்து நடத்து வோர், தம்முடைய கழகக் கொண்டாட்டங்களுக்குச் சைவமும் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களையே வருவித்து அவற்றை நடத்துதல் வேண்டும். வெறும் பட்டங்கள் வாங்கினவர் களையும் ஆங்கிலம் மட்டும் உணர்ந்தாரையும் வருவித்து ஆரவாரம் செய்தல் பயன்படாது. தமிழ் அறிஞர்களை வருவிப்போர் அவர்கட்குத் தக்கபடி பொருளுதவி செய்தல் வேண்டும்.

இத்தமிழ் நாட்டு மக்களெல்லாரும் தமக்குரிய தாய்மொழி யிலேயே எளிதாகக் கல்வி கற்பிக்கப்படல் வேண்டும்.

சைவ மடத்தின் தலைவர்கள், அரசர்களுள் இயற்கைப் பொருள் நூல்களையும், உயிர் நூல்களையும் கடவுள் நூல் களையும் தமிழில் மிகுதியாக மொழி பெயர்த்து அவற்றைப் பயிலும் படிச் செய்தல் வேண்டும்.

சைவ சித்தாந்தமுந் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களோ தமது வாழ்க்கைக்கு வேண்டும் செலவுக்குத் தக்க வருவாய் இன்றிப் பெரிதுந் துன்புறுகின்றார்கள். இவ்வறிஞர்கள் மிக டர்ப்பட்டு எழுதி வெளியிடும் நூல்களின் செலவுக்குக் கூடப் பொருளுதவி செய்வார் எவரும் இல்லாமையால் அவர்கள் படுந் துன்பங்களுக்கு ஓர் அளவே இல்லை. ஆதலாற் சைவ மடங்களின் பொருள்களை இத்தகைய அறிஞர்கட்கும் சைவ சித்தாந்தக் கல்லூரிகட்கும் மிகுதியாகக் கொடுத்துப் பயன்படுத்தல் வேண்டும்.

பொருள் வருவாயை நோக்கி எழுதப்படும் எதுவும் பெரும்பாலும் நிலையான பயனைத் தரத்தக்க தாகாது. இதனை நமது தமிழ்நாட்டுச் செல்வர்கள் உணர்ந்து பார்த்து, நூல் எழுதும் ஆற்றல் வாய்ந்த தமிழறிஞர்கள் வறுமை தீரப் பொருளுதவி செய்திருப்பார்களாயின், இதுகாறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/296&oldid=1577780" இலிருந்து மீள்விக்கப்பட்டது