பக்கம்:மறைமலையம் 6.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மறைமலையம் -6

எத்தனையோ அருந்தமிழ் நூல்கள் பேரறிஞர்களால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும். ஆனால், அச் செல்வர்கள் தமது பெரும் பொருளைப் பயனற்ற தீவினையைப் பெருக்கத்தக்க ஆரவாரமான வழிகளிற் பாழாக்குகின்றனரே யன்றித் தமிழ்மொழியை வளப்படுத்தி வளர்க்குந் துறைகளிற் சிறிதும் பயன்படுத்து கின்றிலர்!

தமிழ்நாட்டிற் செல்வர்களாயிருப்பவர்களும் பிறருந் தமிழ் மொழிப் பயிற்சிக்கும் தமிழ்க் கல்லூரிகள் அமைப்பதற்கும் பொருளுதவி செய்ய வேண்டுமே யல்லாமல், இவற்றை விடுத்து ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிப் பயிற்சிக்கும் அதற்குரிய கல்லூரிகட்குமே பொருளுதவி செய்தல் நன்றாகாது. இத்தமிழ்நாட்டு மக்களெல்லாரும் தமக்குரிய தாய்மொழி யிலேயே எளிதாகக் கல்வி கற்பிக்கப்படல் வேண்டும்.

அறிவிற் சிறந்த தமிழ் மக்காள்! பழிப்புரைக்குச் சிறிதும் அஞ்சன்மின்! எவர் யாது கூறினும் உண்மை சுரக்கப் படாது. நமக்கும் மற்றும் அறிவுடையார் எல்லார்க்கும் சிறந்த அளவை நூல்களாயுள்ள தொல்காப்பியம், திருக்குறள் முதலியனவே நமக்குச் சாலும் என்று மனம் திருந்துமின்கள்! பிறர் கூறும் பகட்டுரைக்கு அஞ்சி உண்மையைக் கைவிட்டுவிடாதீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/297&oldid=1577781" இலிருந்து மீள்விக்கப்பட்டது