பக்கம்:மறைமலையம் 6.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

மறைமலையம் -6

விளக்கப்பட்டபடி இளம் பருவ முதற்கொண்டே நம்முடைய மக்களுக்குக் கற்பித்து வர ஏற்பாடு செய்தல் வேண்டும்.

இச்சமய உண்மைகளுள் எதனையுங் குருட்டுத்தனமாய் நம்பும் தீய பழக்கத்தை ஒழித்து எதனையும் தம்மறிவால் ஆராய்ந்து பார்க்கவும், தம் மறிவுக்கு விளங்காதவைகளை அறிந் தோர்பாற் கேட்டுத் தெளியவும் அவாவை உண்டாக்குதல் வேண்டும்.

மக்கள் உலகத்திலுள்ள எந்தப் பொருளைக் கடவுளாக நினைந்து வணங்கினாலும் அவ்வணக்கம் அப்பருப்பொருள் உருவத்தின்கட் செல்லாததாய், அதற்கு முதலான இறைவனது அருட்பொருள் உருவத்தின்கட் செல்லுமென்பதும், அங்ஙனஞ் செல்லவே அவர்க்கு அவ்விறைவனருள் கிடைக்குமென்பதும் உறுதியாம். கடவுள் அருளின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதற்குக்,

“குறித்ததொன் றாகமாட்டாக் குறைவில னாதலானும்

நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையானும் வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமையானும் நிறுத்திடும் நினைந்த மேனி நின்மல னருளி னாலே”

என்னும் சிவஞான சித்தியார்த் திருமொழியே சான்றாம். எந்த வடிவில் வழிபடுவார்க்கும் இறைவனருள் உண் டென்பதற்கு,

“விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாமே”

என்னும் சான்றாகும்.

திருநாவுக்கரசு

நாயனார்

திருமொழியே

‘சைவ சமயம்' என்பது இவ்விந்திய நாடு எங்கும் உள்ள தமிழ் நன்மக்களால் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு

முன்னே தொட்டுக் கைக்கொள்ளப்பட்ட கடவுட்

கொள்கையாகும். அஃது அவர்களை அறிவிலும் உருக்கத்திலும் ஒழுக்கத்திலும் மேலேறச் செய்து, மற்றை நாட்டவர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/301&oldid=1577785" இலிருந்து மீள்விக்கப்பட்டது