பக்கம்:மறைமலையம் 6.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

275

கோயிலுள் வருவார்களாயின், அவர்களைத் தடைசெய்யாமல், வந்து வணங்குதற்கு இடங் கொடுத்தல் வேண்டும்.

“என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத் தவர்களும் வந்து இறைஞ்சா நிற்பர்”

தாயுமான அடிகளின்

திருமொழியை

என்னும் நம்மவர்கள் எப்போதும் நினைவில் வைத்தல் வேண்டும். ஆனாற் கோவிலுள் வருபவர்கள் எல்லாரும் குளித்து முழுகித் துப்புரவான ஆடை உடுத்து அடக்க வொடுக்கமாய் வாய் பேசாது உட்சென்று வணங்கும்படி செய்தல் வேண்டும்.

கோயில்களில் வழிபாடாற்றுங் குருக்கள்மார் தமிழ் மொழி யிற் பயிற்சி யுடையராயும், சைவ சித்தாந்தம் நன்குணர்ந்த வராயும், தேவார திருவாசகம் ஓதுபவராயும் இருக்கும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். சில கோயில்களிற் றவிரப் பெரும்பான்மையான மற்றைக் கோயில்களில் வழிபாடு செய்யும் குருக்கள் மார்க்குத் தக்க வரும்படியும் தக்க சம்பளமும் இல்லை. ஆதலால், மிகுந்த வரும்படி உள்ள கோயில்களின் வருவாயிலிருந்து மற்றைக் கோயில்களின் ஏழைக் குருக்களுக்குத் தக்க சம்பளங்கள் கொடுப்பித்தல் வேண்டும்.

சில கோயில்களில் வரும் ஏராளமான வரும்படியிற் கோயிலின் இன்றியமையாச் செலவுகளுக்குப் பயன் படுத்தப் பட்டன போக, மிச்சத்தைத் தேவாரப் பாடசாலைக்கும், தனித் தமிழ்ப் பாடசாலைக்கும், சைவசித்தாந்த சபைகட்கும், தமிழ் சைவ சித்தாந்த முணர்ந்த ஆசிரியர்க்கும், தமிழ் நூல் எழுதுவார்க்கும், சைவ சித்தாந்த விரிவுரையாளர்க்கும், கோயிலைச் சார்ந்த சத்திரம் சாவடிகட்கும் பயன்படுத்தல் வேண்டும்.

நாம் இறைவனை வணங்குவது நமக்குப் பெரும் பயன் தருத லோடு, இறைவற்கும் மகிழ்ச்சி தருவதாகலின், அவற்குத் திருக்கோயில்களும் திருவிழாக்களும் அமைத்து வணங்குதலே சிறந்த முறையா மென்க. இஃது உணர்த்துதற்கே அப்பரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/306&oldid=1577790" இலிருந்து மீள்விக்கப்பட்டது