பக்கம்:மறைமலையம் 6.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

279

6. திருவள்ளுவர்

சந்தமிழ் மொழிக்கொரு நந்தாமணி விளக்காய்த் தோன்றித் தன்கட் சுடர்ந்தொளிரும் அறிவுப் பேரொளியைத் தான் பிறந்த தமிழ் நாட்டவர்க்கு மட்டுமேயன்றி, இந்நிலவுலகின் பிற பகுதிகளிலுள்ள பிறநாட்டு மாந்தர்க்கும் வேற்றுமை யின்றி வீசி, எல்லாரையும் ஒரே முழு முதற் கடவுளாம் ஒப்பற்ற தந்தைக்கு உரிமை மகாராய் வைத்து, அவரறிய வேண்டும் அரும்பொருள் முற்றும் ஒருங்கே அறிவுறுத்துந் தெய்வத் திருக்குறள் என்னும் நூலை அருளிச் செய்த பெரியார்.

திருவள்ளுவர் காலமோ, இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்டதாகும். அக்காலத்திலிருந்த பலதிறப்பட்ட மதக் கொள்கைகள் ஆறு சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. வ்வாறு சமயந்தோறும் தத்தம் சமயமே பெரிதென்றும். தத்தஞ் சமயக் கொள்கைகளே தலைசிறந்தன வென்றும் வழக்கிட்ட தோடன்றிப் பிற சமயங்களை மனம் போனவாறு இழித்துங் கூறி வந்தார்கள். இவ்வாறாக மாறுபட்ட இவ்வறு சமயத்தோரும் தழுவிக் கொள்ளத் தக்க வகையில் வள்ளுவனார் முப்பாலை மொழிந்திட்டார். அன்றியும் பலவகைப்பட்ட சாதியாரும், நாட்டினரும், காலத்தினரும், பிறரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் அந்நூல் செய்யப்பட்டிருந்தவை யினாலேயே அதனை 'எப்பாவலரும்' தழுவிக் கொள்வாராயினர்.

கிறித்து பிறப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார். ஆண்டைத் தவிர அவர் பிறந்த நாளும் திங்களும் அதற்குச் சான்றுங் கிடைக்கவில்லை. 1977 ஆண்டுகளுக்கு முன் (இன்றைக்கு 2007) திருவள்ளுவர் பிறந்தார் என்பது மட்டும் உறுதி.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/310&oldid=1577794" இலிருந்து மீள்விக்கப்பட்டது