பக்கம்:மறைமலையம் 6.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் -6 *

தென்புலத்தில் மிக்க நாகரிகமுடையராயிருந்து காலஞ் சன்ற தம் மூதாதையர் அனைவரையும் ஒருங்கு சேர்த்து நினைந்து, அவர்க்கு மேன்மேல் நலம் அருள்கவென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நன்றிக் கடன் செலுத்துவதே, அம்மூதாதையர் வழிவந்த தமிழ் மக்களாகிய நமக்கு உரியதா மென்பதூஉம், அதனையே பண்டைத் தமிழ்ச் சான்றோராகிய நெட்டிம்மையாரும் அவர் வழி பிழையாது வந்த தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும் அருளிய செந்தமிழ்ப் பாட்டுகள் அறிவுறுத்துகின்றன வென்பதூஉம், நம் தமிழ் மக்கட் குரித்தல்லாத பிதுரர் வழிபாட்டைத் "தென்புலத்தார் தெய்வம்” என்னுந் திருக்குறளுக்கு ஏற்றிச் சொல்லிய பரிமேலழகியாருரை கொள்ளற்பால தன்றென்பதூஉம் வ்வாராய்ச்சிக் கட்டுரை யில் எடுத்துக்காட்டி நம் மக்களை மெய்ந்நெறியில் உய்த்தல் இன்றியமையாதல் காண்க.

திருவள்ளுவரியற்றிய திருக்குறளின் கொள்கைகளை நடுநின்று ஆராய்ந்து பார்க்கும் மெய்யறிவாளர்கள், அது சைவக் கோட்பாடுகளைத் தவிர வேறு மதக் கோட்பாடுகளை உள்ளடக்கியது அன்றென்பதை அறிவார்கள். அவர்கள் கடவுள் வழிபாட்டையும், அக்கடவுள் வழிபாடு செய்யும் உயிர்கள் உண்டென்பதையும் வற்புறுத்திச் சொல்லி யிருத்தலாற், கடவுளும் உயிரும் இல்லையென்னும் பௌத்த சமயத்தை அவர் தழுவியர் ஆகார்.

ந்நூலிலடங்காத பொருளில்லை. எல்லாப் பொருளும் தன் கண் அடங்கும். அவ்வாறாக, சொல்லாற் பரந்த பாவாலென் பயன்? வள்ளுவனார் சுரந்த பாவே வையத்துணை யாம். அதிலும், ஓயாய் பிறவி பிறந்தெய்க்கும் இந்நிலையில் வாழ்க்கைக்குச் சொற் பரந்த பல நூல்களா லாவதென்னை? அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திய அருங்குறணூலே

உறுதுணை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/311&oldid=1577795" இலிருந்து மீள்விக்கப்பட்டது