4
குறிப்புகளும்
மறைமலையம் -6
பின்னே விரிவாக எழுதிச் சேர்க்கப் பட்டிருக்கின்றன. தமிழுக்கு ஆக்கமாக எழுதப்படும் நூல்களில் வடசொற்களைக் கலந்தெழுதுதல், ஒரு பெருங்குறை பாடாகக் காணப்படுதலின், முதற்பதிப்பில் ஆங்காங்கு விரவிய சிற்சில வடசொற்களையுங் களைந்து அவற்றிற்கு ஒத்த தூய தமிழ்ச் சொற்களையே பெய்து இதனை அமைத்திருக்கின்றோம்.
இனி, இந் நாடகக் காப்பிய நுண்ணமைப்புகளும் நாடக மாந்தர் இயற்கைகளுங், காளிதாசர் வரலாறும், அவரிருந்த காலமும் பிறவும் சாகுந்தல நாடக ஆராயச்சியில் விரித்து விளக்கப்பட்டிருக்கின்றன.
பல்லாவரம்
பொதுநிலைக்கழகம்
திருவள்ளுவர் ஆண்டு 1963
மூன்றாம் பதிப்பு
மறைமலையடிகள்
இம் மூன்றாம் பதிப்பின்கட் சிற்சில சீர் திருத்தங்களே செய்யப்பட்டிருக்கின்றன. வேறு பெரிய மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை.
இந் நூலை அண்ணமலைப் பல்கலைக் கழகத்தாரும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரும், இலங்கைப் பல்கலைக் கழகத்தாரும் பி.ஏ. வகுப்பிற் பயிலுந் தத்தம் மாணவர்க்குப் பாடமாக வைத்து அவர்க்குத் தனித்தமிழ்ப் பயிற்சியின் நலத்தைக் காட்டினமைக்காக நன்றி செலுத்துகின்றேம்.
பல்லாவரம்
பொதுநிலைக்கழகம்
திருவள்ளுவர் ஆண்டு, 1970 புரட்டாசி, 26
மறைமலையடிகள்