பக்கம்:மறைமலையம் 6.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

9

முன்னுரை

சூத்திரதாரன் வாழ்த்து உரைக்கின்றான்

நான்முகனது முதற்படைப்பான நீரும், விதிப்படி தரப்படுகின்ற அவிப்பலியைத் தாங்குவதான தீயும், அவியைத் தருகின்றவனான இயமானனும், காலத்தை வரையறுக்கின்ற ஞாயிறு திங்களும், செவிப்புலனாகின்ற ஓசைக்கு நிலைக் களனாய் எங்கும் ஊடுருவி நிற்கும் விசும்பும், எல்லா வித்துப் பொருள்களையுந் தன்கண் தோற்றுவிக்கின்ற நிலனும், எல்லா உயிர்களும் மூச்சுவிடுதற்கு ஏதுவான காற்றும் என்கின்ற எண்வகை வடிவங்களுடன் விளங்கும் முதல்வனான சிவபெருமான் உங்களைக் காக்கக்கடவன்

(வாழ்த்துரை முடிந்தவுடன்)

சூத்திரதாரன் : (கோலச் சாலையை நோக்கி) வேண்டும் ஒப்பனைகள் செய்து முடிந்தனவாயின், நங்காய் அன்பு கூர்ந்து வெளியே வருக.

நடி : (வெளியேவந்து) ஐய, இதோ வந்தேன். செய்ய வேண்டுவது இன்னதென்று கட்டளை இடுங்கள்.

வ்

சூத்திரதாரன் : நங்காய், இவ் அரங்கம் பெரும்பாலுங் கல்வி கேள்விகளில் வல்ல புலவரால் நிரம்பியிருக்கின்றது;

காளிதாசராற் புதுவதாகத் தொடுக்கப்பட்ட சாகுந்தலம் எனப் பெயரிய நாடகத்தை இவர் கண்முன் நன்கு நடப்பித்துக் காட்டல் வேண்டும்.ஆதலால், நடிகர் ஒவ்வொருவருந் தத்தமக்குரிய நடிப்புகளிற் கருத்தாயிருத்தல் வேண்டும்.

நடி : தாங்கள் மிகவுந் திருத்தமாய் வகுத்து அமைத்த இதன் கண் யாதுங் குறைபாடிராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/40&oldid=1577094" இலிருந்து மீள்விக்கப்பட்டது