10
மறைமலையம் 6
ம
சூத்திரதாரன் : மாதராய், நான் உண்மையைச் சொல்லி டுகின்றேன். இங்குள்ள அறிவுடையோர் நமது நடிப்பின் திறமையைக் கண்டு மகிழும் அளவும், நம்முடைய திறமை யினைச் சிறந்ததென நான் மதியேன். நன்கு தேர்ச்சியடைந்த அறிவுடையோர் உள்ளமுந் தன்னளவில் நம்பிக்கை
இல்லாததாய் இருக்கின்றது.
நடி : நல்லது, ஐய, இனி, அடுத்து யாது செய்தல் வேண்டுமெனக் கட்டளையிடுகின்றீர்கள்?
- ஓர்
சூத்திரதாரன் : ஓர் இசைபாடி இங்குள்ளோர் செவி கட்கு விருந்து செய்தலைவிட வேறு என்செய்தல் வேண்டும்?
நடி : அப்படியாயின், எந்தக்காலத்தைப் பற்றி யான் பாடலாம்?
சூத்திரதாரன் : இன்பந் துய்த்தற்கு ஏற்றதாய் இப்போது தான் தோன்றியிருக்கும் இவ் வேனிற் காலத்தைப் பற்றியே வ் பாடு. ஏனென்றால், வெயில்நாளின் பகற்பொழுது தண்ணீரில் தலைமுழுகுவதற்கு இனிதாயிருக்கின்றது; *பாதிரிமலர் முகிழ்களில் அளைந்து அவற்றின் நறுமணத்தைக் கொள்ளை கொண்டு கானகக் காற்று மெல்லென வீசுதலால், இந்தப் பொழுது அடர்ந்த மரநிழல்களில் அயர்ந்த துயிலை எளிதில் வருவிக்கின்றது; மாலைக்காலமோ மிகவும்
யிருக்கின்றது.
நடி: அவ்வாறே (பாடுகின்றாள்)
விரியு மணமவிழ்க்கும் மலர்முகிழ்மே லெல்லாங்
கரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்!
எரியுந் தளிர்ப் பிண்டி யிணர்கிள்ளி யோடுங்
கரியவிழி மாதர் காதிடலுங் காணாய்!
னிதா
சூத்திரதாரன் : ஆ! என் அன்பே, மிக இனிதாய்ப் பாடினாய். இக் குழுவிலுள்ளார் அனைவரும் ஓவியத்தில் எழுதிய உருவம்போல் நின் இசைப்பாட்டிற் கட்டுண்டு ஆ! முதனூலில் சிரீஷமலர் என்றுள்ளது.