16
மறைமலையம் 6
சிதர்ந்து மினுமினு வென்று மிளிர்கின்றன; ளமான் கன்றுகள் அச்சம் இல்லாப் பழக்கத்தினால் நமது தேரின் ஓசை கேட்டும் ஓடாமல் மேய்கின்றன; நீர்நிலைகளுக்குச் செல்லும் வழிகள் மரவுரியாடையின் ஓரத்தினின்றுஞ் சொட்டின நீர்த்துளிகளினால் வரிவரியாய்க் குறிப்புக் காட்டுகின்றன; இன்னுந், தென்றற்காற்றாற் சிற்றலை தோன்றுங் கால்வாய் நீரில் மரங்களின் வேர்க்கற்றைகள் முழுகி அலசப்படுகின்றன; அதோ திகழும் இளமென் றுளிர்களின் நிறமானது தூய் தாக்கிய வெண்ணெயைச் சொரிந்து வேட்கும் புகையினாற் பல்வேறு நிறமாக மாறுகின்றன; அருகே உள்ள தோப்பின் நடுவிலே தருப்பைப் புல்லின் கொழுந்து அறுக்கப்பட்டுவிட்ட நிலத்திற் பெட்டைப் புல்வாய்க்கலைகள் அச்சமின்றிப் புற்கறித்து மெல்ல உலவுகின்றன.
தேர்ப்பாகன் : இன வையெல்லாம் மிகவும் உண்மையே.
அரசன் : (சிறிது எட்டிப்போய்) பாகனே! தவவொழுக்கம் நிகழும் இத் தோப்பின்கண் உள்ளார்க்கு எவ்வகை இடைஞ்சலும் உண்டாதல் கூடாது; இந்த இடத்திலேயே தேரை நிறுத்திவிடு, நான் இறங்குகின்றேன்.
தேர்ப்பாகன்: நான் கடிவாளத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டேன்; நீடு வாழ்வீர் இறங்கலாம்.
அரசன்: (இறங்கி) பாகனே! தவவொழுக்கம் நடைபெறும் ஆசிரமங்கள் தாழ்மையான உடையுடன்றான் நுழையற் பாலனவென்பது நன்கு தெரிந்ததுதானே
வைகளை
வைத்துக்கொள். (அணிகளைக் கழற்றி வில்லை எடுத்து அவற்றைப் பாகன் கையிற் கொடுக்கின்றான்.) பாக, இவ்வாசிரமத்தின் உள்உறைவோரைப் போய்க்கண்டு நான் திரும்பி வருவதற்குள் குதிரைகள் முதுகு கழுவப்பட்டிருக் கட்டும்.
தேர்ப்பாகன்: அப்படியே (போய்விடுகின்றான்.)
அரசன் : (சுற்றிலும் போய்ப் பார்த்து) இவ்வாசிரமத்திற்கு வழி இதோ இருக்கின்றது; இதற்குட் புகுகின்றேன். (புகுதலும்