சாகுந்தல நாடகம்
19
என்றாலும், அணிகலங்கள் அழகு செய்தல்போல் அஃது அழகு செய்யாமலுமில்லை; ஏனென்றால், தாமரை சடைப்பாசியினாற் சூழப்பட்டிருந்தாலும் அழகு மிகுந்தே தோன்றுகின்றது; வெண்டிங்களிலுள்ள களங்கங் கரியதா யிருந்தாலும் அஃததனழகை மிகுதிப்படவே செய்கின்றது. அங்ஙனமே இம் மெல்லியலும் மரவுரியாடையிலுங்கூடக் கவர்ச்சிமிக்கே தோன்றுகின்றாள். இயற்கையிலேயே
அழகினாற் கனிந்து விளங்கும் உருவத்திற்கு எதுதான் அணிகலமாய் இராது?
சகுந்தலை : (எதிரே பார்த்து) இவ்விளந் தேமா மரமானது தென்றற் காற்றில் அசையுந் துளிர்களென்கின்ற விரல்களால் என்னை அருகில் விரைந்தழைப்பதுபோல் தோன்றுகின்றது. யான் அதன் பாற் செல்கின்றேன்.(அப்படியே செல்கின்றாள்.)
பிரியம்வதை: அன்புள்ள சகுந்தலா, அங்கேயே சிறிது நேரம் நில்.
சகுந்தலை : ஏன்?
பிரியம்வதை : நீ அதன் பக்கத்தில் நிற்கையில், அத் தேமாமரம் ஓர் இளங்கொடியொடு பிணைந்திருப்பது போல் தோன்றுகின்றது.
க
சகுந்தலை
தனாலே தான் நீ பிரியம்வதை
னிமையாய்ப் பேசுபவள்) என்று அழைக்கப்படுகின்றாய்.
அரசன் : பிரியம்வதை பேசுவது
னிமையாக இருந்தாலும், அஃது உண்மையாகவேயிருக்கின்றது. என்னை? வளது கீழ்இதழ் இளந் தளிரைப்போற் சிவப்பா யிருக்கின்றது, இவள் தோள்கள் மென் கொம்புபோல் மெல்லியவாயிருக்கின்றன, இவளது கட்டிளமையானது இவளுடம்பினுறுப்பெங்கும் முகிழ்த்துத்
மலர்போல் தோன்றுகின்றது.
அனசூயை அன்புள்ள சகுந்தலா, வானதோசினி அல்லது கான்மதியம் என்று நீ பெயரிட்ட இப் புதிய
நீ