பக்கம்:மறைமலையம் 6.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் -6

மல்லிகைக்கொடி இத் தேமாவிற்குத் தானே தெரிந்தெடுத்த மணமகளாயிருக்கின்றது பார்; நீ அதனை மறந்துவிட்டாயே.

சகுந்தலை : அப்படியாயின் யான் என்னையே மறந்தேன் ஆவேன்; (அக் கொடியண்டைபோய்ப் பார்த்து, தோழி, மகிழ்ச்சியைத் தருகின்ற இப் பருவத்தில் மரமுங் கொடியுமாம் இவ்விரண்டின் மணமும் நிகழ்ந்திருக்கின்றது. இம் மல்லிகைக் காடி புதிய மலர்கள் அலர ளம் பருவத்தை அடைந்திருத்தலாலுந், தேமாமரம் புத்தப் புதியதழைகள் உடைமையாலும், இவை இன்பம் நுகர்தற்கு ஏற்றனவாய்த் திகழ்கின்றன. (பார்த்துக்கொண்டே நிற்கின்றாள்.)

பிரியம்வதை : அனசூயே, ஏன் சகுந்தலை அம்மல்லிகைக் கொடியை உற்றுப்பார்த்துக்கொண்டு நிற்கின்றாள் தெரியுமா? அனசூயை : உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை,

சொல்.

பிரியம்வதை : “அம் மல்லிகைக்கொடி தனக்கிசைந்த தேமாவினை மணந்துகொண்டமைபோல, நானுந் தகுந்த ஒரு கணவனை மணக்கலாகுமா?" என்று கருதுகின்றாள்.

சகுந்தலை : இதுதான் உன் உள்ளத்தில் உள்ள உண்மை யான எண்ணம். (தண்ணீர்க் குடத்தைச் சாய்க்கின்றாள்)

பண்

அரசன் : இத் துறவாசிரமத் தலைவர்க்குரிய குலத்தினள் அல்லாத ஒரு மனைவி வயிற்றில் இப் பிறந்திருக்கமாட்டாளா. அல்லது, நான் ஏன் ஐயப்பட வேண்டும். என் சிறந்த உள்ளமும் இவள்மேற் காதலுற்று விழைந்தமையால், ஐயமின்றி இவள் அரச குடியினருடன் மணங்கூடத் தக்கவளே யாவள். ஏனெனில், ஐயப்படுதற்கு ஏதுவான நிகழ்ச்சிகளில் நல்லோர் தம் உள்ளம் எந்தப் பக்கத்திற் சாய்கின்றதோ அதுதான் மேற்கொள்ளற்பாலது; என்றாலும், இவளைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்கின்றேன்.

சகுந்தலை : (மனக் கலக்கத்தோடு) ஐயோ எனக்கு உதவி செய்யுங்கள்! நான் தண்ணீர் சொரிந்தமையாற் கலைக்கப் பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/51&oldid=1577107" இலிருந்து மீள்விக்கப்பட்டது