பக்கம்:மறைமலையம் 6.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

27

சகுந்தலை : ஐயையாகிய கௌதமியிடம் போய் இந்தப் பிரியம்வதை வாய்க்கு வந்தவாறு டக்கர் பேசுகின்றாள்

என்று முறையிடுகின்றேன்.

அனசூயை : என் அன்பே, இவ்வளவு சிறந்த ஒரு விருந்தினரைப் புறக்கணித்துவிட்டு, நின் விருப்பம்போல் விலகிப் போதல் துறவாசிரமத்தில் இருப்போர்க்குத் தக்க தன்று மேலும், அவர்க்குச் செய்யவேண்டும் வழிபாடுகளு ஒன்றுஞ் செய்தபாடில்லை.

(சகுந்தலை ஒன்றுஞ் சொல்லாமற் புறப்படுகின்றாள்.)

ள்

அரசன் : (தனக்குள்) ஆ! இவள் ஏன் போக முயல் கின்றாள்? (அவளைப் பிடித்திழுக்க விரும்பியுந் தன்னைத் தடுத்து) ஓ! காதலுற்றோர் மனவியற்கையும் அவர்கள் செய்கை யுந் தம்மில் எவ்வளவு ஒத்திருக்கின்றன ! இம் முனிவர் மகளைப் பின்றொடர்ந்து பற்றிக்கொள்ளல் வேண்டுமெனக் கருதியும், அது முறையன்மையால் உடனே அதனைத் தடுத்துவிட்டேன். இருந்தவாற்றால், நான் என் இருக்கையைவிட்டு எழுந்திரா விடினும் பின்சென்று மீண்டவனாயினேன்.

பிரியம்வதை : (சகுந்தலையைத் தடுத்து) தோழி, நீ செல்வது தகுதியன்று.

சகுந்தலை : (புருவத்தை நெறித்து) ஏன்?

பிரியம்வதை : நீ எனக்காக இரண்டுமுறை மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டியவளாய் இருக்கின்றாய். அதனால் வந்து என் கடனைத் தீர்த்துவிட்டு வேண்டுமாயின் நீ அப்புறம் போகலாம். (அவளைத் திரும்பும்படி வலுக்கட்டாயம் பண்ணுகின்றாள்.)

அரசன்: நல்லாய்! இப் பெண் மரங்களுக்குத் தண்ணீர் விட்டமையாலேதான் களைத்துப்போ யிருக்கின்றாளென்று நம்புகின்றேன். ஏனென்றால், தண்ணீர்க்குடந் தூக்கினமையால் இவள் இரண்டு தோள்களுஞ் சோர்ந்திருக்கின்றன இரண்டு உள்ளங்கைகளுஞ் செக்கச் செவேலெனச் சிவந்திருக்கின்றன; இன்னுங்கூட நெட்டுயிர்ப் பெறிதலால்

இவள்

பருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/58&oldid=1577114" இலிருந்து மீள்விக்கப்பட்டது