பக்கம்:மறைமலையம் 6.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

இரண்டாம் வகுப்பு

களம் : துறவாசிரமத்து ஓரத்திற் கூடாரம் அமைக்கப் பட்ட மணல்வெளி.

(அலந்துபோன விதூஷகன் வருகின்றான்.)

க்

விதூஷகன் : (பெருமூச்செறிந்து) ஐயோ! வேட்ட மாடுவதிலேயே மனம்பற்றி யிருக்கின்ற இவ் வரசனோடு சேர்ந்து நான் அலந்து போகின்றேனே. அங்கே ஒரு மான், அதோ ஒரு பன்றி, இதோ ஒரு புலி, என்கின்ற கூச்சலுடன், மரநிழலும் அரிதாய்ப் போன இந்தக் கோடை காலத்தில் காட்டுத் தோப்புகளிலே புகுந்து உச்சிப் பகலிலும் ஒரு கானகத்திலிருந்து மற்றொரு கானகமாக அலைந்து கொண்டிருக்கின்றோமே! உதிர்ந்து அழுகிய சருகுகளால் நிரம்பிக், கசப்பாயும் வெதுவெதுப்பாயும் இருக்கும் மலையருவிகளின் நீரை அருந்தி வருகின்றோமே! இருப்புக் கம்பியிற் கோத்துக் காய்ச்சிய இறைச்சியையே பெரும்பாலும் வேளை தப்பிய வேளையில் உண்டு வருகின்றோமே! அவன் பின்னே குதிரைமேற் போவதால் என் மூட்டுக்களெல்லாம் உராய்ந்து, இரவிலுங்கூட நான் நன்றாய் அயர்ந்து தூங்கக் கூடாதவனாய்விட்டேன். மறுபடியும் விடியற்காலையிலேயே வேட்டையாடும் அவ் வேசி மக்கள் காட்டைக் கலைக்க இடுங் கூச்சலால் விழித்து விடுகின்றேன். இவ் வெல்லாவற் றோடுமாவது இன்னுந் துன்பம் ஒழிந்தபாடில்லை. பின் பின்னுங் கட்டிமேற் சிலந்தி யெழுந்தாற் போல, நேற்று எம்மைவிட்டு அகன்றபின் அரசன் ஒரு மானைத் துரத்திக் கொண்டுபோய்த் துறவாசிரமத்தில் நுழைந்த நேரத்தில் என் கெட்டகாலம் அவனுக்குச் சகுந்தலை என்ற துறவிமகள் ஒருத்தியைக் காட்டிவிட்டது. இப்போது அவன், தன் நகரத்திற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/62&oldid=1577119" இலிருந்து மீள்விக்கப்பட்டது