பக்கம்:மறைமலையம் 6.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

33

விதூஷகன் : (முன்போலவே நின்றுகொண்டு) ஓ நண்பரே! என் கையுங் காலும் நீட்டக் கூடவில்லை. ஆகவே, உமக்கு வெற்றியுண்டாகக் கடவதென்று வெறுஞ்சொற்களால் மட்டும் வாழ்த்துகின்றேன்.

அரசன் : (முறுவலித்து) உன் உடம்புக்கு எங்கேயிருந்து இந்தத் திமிர்ப்பிடிப்பு வந்துவிட்டது?

விதூஷகன் : நீரே என் நீரே என் கண்ணைக் குத்திவிட்டுக் கண்ணில் ஏன் நீர் வருகின்றதென்று கேட்கின்றீரே?

அரசன் : நீ சொல்லுகின்றது எனக்கு உண்மையாய் விளங்கவில்லை.

விதூஷகன் : ஓ நண்பரே! நாணல் ஒரு கூனன்போல் வளைவது தனக்குள்ள ஆற்றலினாலா அல்லது நீரோட்டத்தின் விரைவினாலா?

அரசன் : அதற்குக் காரணம் நீரோட்டத்தின் விரைவுதான்.

விதூஷகன்

நீர்தாங்காரணம்.

அரசன் : எவ்வாறு?

அப்படியே எனது நோய்க்கும்

விதூஷகன் : நீர் நுமக்குரிய அரசியற் கடமைகளை விடுத்து, இவ் விருண்ட காட்டுள் வேட்டுவனைப்போல் திரிந்து கொண்டிருக்கின்றீரே! உமக்கு உண்மையைச் சொல்லு கின்றேன், காட்டு விலங்குகளைப் பின்றொடர்ந்து நாடோறும் ஓடுதலால், என்னுறுப்புக்களின் பொருத்துக்கள் உராய்ந்து மூட்டுவிட்டுப் போய்விட்டன; என் உறுப்புக்கள் என் வசப்படவில்லை ஆகையால், ஒரு நாளைக்கேனும் நான் இளைப்பாறியிருக்க விடை தரும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

அரசன் : (தனக்குள்) இவனும் இவ்வாறு சொல்லினான். காசியபருடைய ய மகளை நினைந்து என் L மனமும்

வேட்டமாடுவதில்

மாடுவதில் இளைப்படைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/64&oldid=1577121" இலிருந்து மீள்விக்கப்பட்டது