34
மறைமலையம் -6
புள்ளி விளங்கு பொன்மான் உடன்பயின்ற
வள்ளைச் செவியாளென் மாதர்க் கொடிதனக்குத் தெள்ளு மடநோக்கந் தெருட்டியதால் மற்றதனை
உள்ளிக் கணைதொடுத்தும் உய்த்திடநான் மாட்டேனால்.
விதூஷகன் : (அரசன் முகத்தைப் பார்த்து) நீர் எதைப்
பற்றியோ உள்ளுக்குள்ளேயே நினைந்து சால்லிக் காள்ளுவதுபோல் தோன்றுகின்றது; நான் கானகத்தில்
அழுதவனாய் விட்டேன்.
அரசன்
- (புன்முறுவல்செய்து) வேறென்ன? நண்பனுடைய சொல்லைக் கடக்கக் கூடாதென்று எண்ணிக் கொண்டு வாளா நின்றேன்.
விதூஷகன் : நீடு வாழ்வீராக! (போக முயல்கின்றான்.)
அரசன்
- சிறிது பொறு, இன்னுஞ் சிறிது யான் சொல்லவேண்டியிருக்கின்றது.
விதூஷகன் : அப்படியே தாங்கள் கட்டளையிடலாம். அரசன் :- இளைப்பாறிய பின், வருத்தம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் எனக்கு நீ துணைவனாக இருக்கவேண்டும்.
விதூஷகன் : அதென்ன கொழுக்கட்டைதின்பதிலா? அரசன் : எதில் என்பதைச் சொல்கின்றேன்.
விதூஷகன் : நான் என் சொல்லைப் பிணையாக வைத்திருக்கின்றேன்.
கட்ட
வா.
அரசன் : யார் அங்கே?
(வாயில்காவலன் புகுகின்றான்.)
வாயில்காவலன் : (வணங்கி) மன்னர் பெருமான்
ளை.
அரசன் : ஏ இரைவதகா! படைத்தலைவனை அழைத்து