36
மறைமலையம் 6
தீதென்று சிலர் சொல்வது பொய்யே யாகும். இதைப்போல் வேறெந்த விளையாட்டு எங்கே கிடைக்கும்?
வி
விதூஷகன் : (சினந்து) கிளர்ச்சியைத் தூண்டிவிடும் நீர் அப்பாற் போம். வேந்தர் பெருமான் தமது இயற்கை நிலைக்குத் திரும்பி யிருக்கின்றார். இதற்கிடையில் நீர் வேண்டுமானால் காட்டுக்குக் காடு திரிந்து ஓர் ஆடவன் மூக்கு இறைச்சியைத் தின்ன விரும்பும் முதிய ஒரு கரடி வாயிற்பட்டு ஒழியும்.
அரசன் : நல்ல படைத் தலைவ! யாம் துறவாசிரமத்திற்கு அருகாமையிற் படை விட்டிருக்கின்றோம். ஆதலால் நின்சொற் களுக்கு யான் உடன்படேன். இன்றுமுதற் காட்டெருமைகள் நீர் நிலைகளிற் புகுந்து தம் மருப்புகளால் நீரை யடித்தடித்துக் குழப்பிக்கொண்டு கிடக்கட்டும்; மான்மந்தைகள் மரநீழல்களிற் குழாங்கொண்டு, அசை போட்டுக் கொண்டிருக்கட்டும்; பரிய காட்டுப்பன்றிக் கூட்டங்கள் குட்டை யோரங்களிற் கோரைக் கிழங்குகளை அச்சமின்றிக் கெண்டி யுண்ணட்டும்; நாண் முடிச்சு இடப் பட்ட எம்முடைய வில்லும் நாண் தளர்த்தப் பட்டு இளைப்பாறட்டும்.
படைத்தலைவன் : எம்பெருமான் வேண்டுமாறே.
க
அரசன் : அப்படியாயின், காட்டைக் கலைப்பதற்காக முன்னேறிச் சென்றோரை எல்லாந் திரும்ப வரவழைத்து விடு; தவவொழுக்கம் நிகழும் இக் கானகத்திற்கு எத்தகைய டைஞ்சலும் உண்டாக்காவண்ணம் நம் போர்க்களமர் அச்சுறுத்தப் படுவாராக; தவச் செல்வத்தை உரிமையாக வுடைய துறவிகள் மாட்டுப் பொறுமைத் தன்மை மிகச் சிறந்து விளங்கினாலும், எரித்துவிடுந் தன்மையுள்ள ஒரு தீ அவரிடத்துக் கரந்திருத்தலும் நினைவுறக் கடவாய் ; முன்னே தொடுதற்கு இனிதாயிருந்த சூரிய காந்தக்கல் வெங்கதிர் வெப்பம் பட்ட அளவானே தீக்காலுதல்போல அவரும் அதனை வெளிப்படுத்தா நிற்பர்.
படைத்தலைவன் : எம்பெருமான் கட்டளையிடுமாறே.