சாகுந்தல நாடகம்
37
விதூஷகன் : ஏடா வேசிமகனே, இப்போது ஓடிப்போ. நீ தூண்டுதற்குச் சான்ன
அரசனைத்
வாய்க்கவில்லையே.
புளுகெல்லாம்
(படைத்தலைவன் போய்விடுகின்றான்)
அரசன் : (தன் ஏவலரைப் பார்த்து) நீங்கள் போய் வேட்டையுடைகளைக் களைந்து விடுங்கள். ஏ இரைவதகா, நீயும் உன் தொழிலைப் பார்.
ஏவலர்
கின்றார்கள்)
- தங்கள் கட்டளைப்படியே. (போய்விடு
விதூஷகன் : ஓர் ஈ கூட இல்லாமல் துரத்திவிட்டீர். இம் மர நீழலில் நெருங்கி இடைமிடைந்த இப் படர்கொடிப் படங்கின்கீழ் உள்ள இருக்கையில் இப்போது அமரும்; நானும் ஆறுதலாய் இருக்கின்றேன்.
அரசன் : வழிகாட்டிக்கொண்டு செல்.
விதூஷகன் : இவ்வழியாய் வாருங்கள்.
இருவருஞ் சுற்றிப்போய் அமர்கின்றனர்.)
அரசன் : மாதவிய! கட்கினிய தொரு நன்பொருளை நீ கண்டிலாமையின், நின் கண்களாற் பெறப்படும் பயனை நீ பெற்றிலை.
விதூஷகன் : ஏற்கனவே, நீர்தாம் என் கண்ணெதிரே ருக்கின்றீரே.
அரசன் : ஒவ்வொருவருந் தத்தமக்குரிய தொன்றனையே அழகிதெனக் கருதுகின்றனர். ஆயினும், அத்துறவாசிரமத் திற்கு ஓர் அணிகலம்போற் சிறந்து திகழுஞ் சகுந்தலையைக் குறித்தே நான் பேசுகின்றேன்.
விதூஷகன் : (தனக்குள்) நல்லது, இவன் நினைப்பதற்கு இடமில்லாமற் செய்துவிடுகின்றேன். (உரக்க) ஓ நண்பரே! அவள் ஒரு துறவி மகளாயின் அவளைப் பார்ப்பதிற் பயன் யாது? சொல்லும்.