38
மறைமலையம் -6
அரசன் : சீ! நீ அறியாய்! மக்கள் எத்தன்மையான எண்ணத்துடன் முகத்தை மேலேறிட்டுக்கொண்டு கண்கள் இமையாமல் முழுமதியின் புத்தொளியை நோக்குகின்றனர்? பாங்கனே! புருவின்குடியிற் பிறந்தாரது மனம் விலக்கப் பட்டதொரு பொருளை நாடாது. அம் முனிவர் மகள் வானநாட்டில் உறையும் ஓர் அரம்பை மாதின் மகளென்றும், அம் மாதினால் தனியே விடப்பட்ட காலையிற் புது மல்லிகைப்பூக் காம்பு சுழன்று எருக்கம் புதன்மேல் விழுந்தாற்போல், அவராற் கண்டெடுக்கப்பட்டா ளென்றுஞ் சொல்லப் படுகின்றனள்.
L
விதூஷகன் : (சிரித்து) பேரீச்சம்பழத்தைத் தின்ற ஒருவன் அதனை ஒழித்துப் புளியம்பழத்தை உண்ண விரும்புதல் போல, உமது உவளகத்திலுள்ள அழகிய மகளிரைவிட்டு நீர் இங்ஙனம் விழைவு கொண்டீர்.
அரசன் : *“காணிற் கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே.” (திருச்சிற்றம்பலக்கோவையார்: 23)
விதூஷகன் : உம்மிடத்தும் இத்தகைய தொரு வியப்பினை விளைவித்த அது பெரிதுங் கவர்ச்சி யுடையதாகத் தான் இருக்கவேண்டும்.
அரசன் : நண்பா! என்ன மிகுதியாகச் சொல்வது?
ஓவிய மாக எழுதிய பின்னை யொருமுதல்வன்
ஆவி புகுத்தி விடுத்தன னோவன் றழகையெல்லாந்
தாவி மனத்தாற் றிரட்டின னோவவன் றன்வலிவும்
பூவை யுருவும் நினையிற்பொன் னாளோர் புதுமையன்றே?
இருந்தவாற்றால் அவள் மகளிர்க்கெல்லாம் வேறாய் அவர்க்கு ஓர் அணிகலம்போல் எனக்குச் சிறந்து காணப் படுகின்றாள்.
விதூஷகன் : அப்படியாயின், மற்றை அழகிய பெண் களெல்லாரும் பின்புறந் தள்ளப்பட்டாராயினர்.