சாகுந்தல நாடகம்
(காமநோய் கொண்டோன் நிலையில் அரசன்
வருகின்றான்.)
47
அரசன் : (நெட்டுயிர்ப்பெறிந்து) தவத்தின் பெருமை ன்னதென்பதும் நான் அறிவேன்; அப் பெண் தன் விருப்பப்படி நடக்கக்கூடாதவளென்பதும் நான் அறிவேன். அங்ஙனமிருந்தும், என் நினைவை அவளினின்று என்னால் திருப்பமுடியவில்லையே! (காமவருத்தந் தாங்காமல்)
களிவளர் கடவுளாங் காம தேவனே!
எளியன்மேற் சிறிதுநீ இரங்கல் இல்லையால்; ஒளிவளர் மலர்க்கணை உறப்பொ ருந்துநீ அளியிலை கொடியைஎன் றாய தென்கொலோ!
(நினைத்துப் பார்த்து) ஆ! நன்றாய் அறிந்தேன். விரிகட லடியிற் புதைந்தவெந் தழல்போல் வெகுண்டசிவன் எரிவிழிகான்ற கொழுந்தீ நினது அகத்து எரிகின்றதால்; பொரிபடவெந்து சாம்பர் ஆயினை யெனிற் பொறாதஇடர் புரிவாய்! எமைவெதுப் பல்எவ்வா றுனக்குப் பொருந்தியதே?
பூங்கணை வாய்ந்த புத்தேள்! நீயும் புதுமதியும் ஈங்குள மக்கட் கின்பந் தருவீர் எனஎண்ணி ஏங்கிய காதலர் எல்லாம் ஏமாந் தனரானார்; தாங்காக் காதல் என்போன் மாந்தர் தளர்வாரே.
மலரைக் கணையாய் உடையாய் எனநீ வருகுதலும் அலர்தண் கதிரோன் அவனென் றறையும் அவ்வுரையும் இலவாம் பொய்யே; எம்போல் வார்க்கவ் வெழின்மதியம் உலர்வெந் தீயே பொழியும் உறுதண் ஒளியாலே
நீயோ மலர்வெங் கணையை இடிபோல் நிறைக்கின்றாய்! ஆவா மருட்டும் அலர்கண் மடவாள் பொருட்டாக ஓவாது எனைநீ புடைக்கின் றமையால் உயர்மீனப் பூவார் கொடியாய்! என்னாற் புகழப் படுவாயே.