இலக்கியம் - 1
vii
ஒப்புயர்வற்ற தொண்டு!
மறைமலை அடிகளைத் தெரியாத தமிழர்கள் இல்லை யென்றே சொல்லலாம். அடிகள் தமிழுக்காகச் செய்துள்ள தொண்டு ஒப்புயர்வற்றதாகும். அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் அன்னாரின் பெருமையைத் தமிழுள்ளளவும் எடுத்துக் காட்டும் என்பது உறுதி.
சைவசமய வளர்ச்சிக்காக அடிகள் அல்லும் பகலும் அயராது உழைத்து வந்துள்ளார். தமக்கு நேர்மாறான கொள்கையுடையவர்களுடனும் தோளோடு தோள்நின்று இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் அடிகள் ஈடுபட்டது அன்னாருக்குத் தமிழ்மொழியின் மீதுள்ள அளவுகடந்த பற்றுதலை நன்கு விளக்குகிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்ச்சியுள்ள பேராசிரியர் மறைமலையடிகளாரது பிரிவு தமிழ் நாட்டுக்கு ஈடுகட்ட முடியாத ஒரு பெரும் நட்டமாகும் என்பதில் ஐயமில்லை. அடிகளின் ஆத்ம சாந்திக்காக நாம் இறைவனைப்
பிரார்த்திப்போமாக.
- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
(பக். 40)