பக்கம்:மறைமலையம் 6.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

49

தோழியர் மருங்கிற்சா அய என்

இன்னுயிர்ச் செல்வியைக் கண்ணுற லானே.

நல்லதிருக்கட்டும்.

அவர்கள்

ஏதுந்தடையின்றிப்

பேசுவனவற்றைக் கேட்கின்றேன். (பார்த்துக்கொண்டே

நிற்கின்றான்.)

(முன்சொன்னவாறே சகுந்தலையும் அவள் தோழிமாரும் இருந்துகொண்டு பேசுகின்றனர்)

தோழிமார் : (மெல்ல அவளுக்கு விசிறிக்கொண்டே) தோழி சகுந்தலே! இந்தத் தாமரை இலைகளிலிருந்து வருங் காற்று உனக்கு நலந் தருகின்றதா?

சகுந்தலை

விசிறுகின்றனர்?

என் தோழிமார்

எனக்கு

ஏன்

(தோழிமார் மனக் கலக்கத்தோடு ஒருவரை யொருவர் பார்க்கின்றனர்.)

அரசன் : உண்மையாகவே இந் நங்கை உடம்பு நலமின்றி இருப்பதாகவே காணப்படுகின்றனள். (உணர்ந்து பார்த்து) து கதிரவன் வெப்பத்தால் உண்டாயதோ அல்லது என் உள்ளத்திலுள்ளதுபோற் காமவெப்பத்தால் வந்ததோ ! (விழைவுடன் உற்றுநோக்கி) ஆ ! ஐயம் ஒழிந்தது !

நறுமண நரந்தம் நகிலமேற் றிமிர்ந்துந் தாமரை நாளங் காமரு கையிற்

பவளக் கடகமெனத் துவள வளைத்தும் என், ஆருயிர்க் காதலி ஓரயர் வுறினும் எழில்மிகு செவ்வியள் மாதோ, கழிபெருங் காதல் பயந்த ஏதமுறு நோயுஞ்

சுடுகதிர்க் கனலி அடும்பெரு வருத்தமும் ஒன்றென மொழிவ ராயினும் என்றூழ் பொழிகதிர் வருத்த மிதுபோல்

மழவிள மகளிர்க்கு அழகுபயந் தின்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/80&oldid=1577139" இலிருந்து மீள்விக்கப்பட்டது