சாகுந்தல நாடகம்
வண்மலர்க் கன்னமும் வறண்டு வற்றின திண்ணிய கொங்கையுந் திறந் திரிந்தன
நுண்ணிய நடுவுமேல் நுணுகிப் போயின
வண்ணமும் வெளிறின தோளும் வாடின;
உருக்கிளர் இளந்தளிர் உலரத் தீய்த்திடு
பொருக்கெனுந் தீவளி பொருந்த வாடிய மருக்கமழ் மல்லிகை போன்ற மாதர்பால்
51
இரக்கமும் இன்பமும் ஒருங் கெழுந்தவே.
சகுந்தலை : நல்லது, வேறு யாருக்குத்தான் யான் சால்லப் போகின்றேன்! இப்போது உங்களுக்குத்
தொல்லையை உண்டுபண்ணுகின்றவ ளாகின்றேன்.
இருவரும் : அதனாலேதான் எங்களது இவ்வளவு வலுக்கட்டாயமும். அன்புடையவர்களுக்குத் தெரிவித்தால் தான் துயரமானது தாங்கக் கூடியதாகின்றது.
அரசன் : இன்ப துன்பங்களில் தன்னோடு ஒன்றுபட்டு ருப்பவரால் உசாவப்படுதலின், இம் மாது தன் நெஞ்சத்தில் ளித்துவைத்த இந்த நோயின் மூலத்தைத் தெரிவியாது இராள். யான் இவளால் அடுத்தடுத்து விழைவுடன் நோக்கப் பட்டமையால், இவள் தன் நெஞ்சத் துள்ளதைத் திறந்து காட்டினளாயினும், இந்த நேரத்தில் இவள் யாது சொல்வளோவெனக் கேட்கக் கலங்குகின்றேன்.
சகுந்தலை : தோழி! இத் தவ அடவியைப் பாதுகாப்பவ ரான அந்த அரசமுனிவர் என் கண்ணிற் பட்டதுமுதல் (நாணத்தால் மேற்சொல்லமாட்டாம லிருந்துவிடுகின்றாள்.)
இருவரும் : நம் அன்புமிக்க தோழி மேலுஞ் சொல்ல வேண்டுவதைச் சொல்லட்டும்.
சகுந்தலை : அந்நாள்முதல் அவர்மேற் சென்ற காதலால், யான் இங்ஙனம் மெலிவுறலானேன்.