சாகுந்தல நாடகம்
53
பிரியம்வதை : மறைவிடந்தான் ஆராயற்பாலது; விரை வாகச் செய்தல் எளிது.
அனசூயை : எப்படி? எப்படி?
பிரியம்வதை : அன்போடு கூடிய பார்வையினால் இவள் மேல் தமக்குள்ள காதலை வெளிப்படுத்தும் அவ் அரசமுனிவர் சிலநாட்களாக உறக்கம் இன்றி மெலிந்திருப்பது உண்மை யன்றோ?
அரசன்
ஆய்விட்டேன்;
உண்மையாகவே நான் அப்படித்தான்
கைமேற் றலைவைத் திரவிற் கிடக்கக் கடைக்கணின்று பெய்ந்நீர் அழற்ற நிறந்திரி வான பெருமணிகள்
மொய்பொற் கடகம்வில் நாண்டழும் புற்ற முனைநழுவிச் செய்யில் உரிஞ்சப் பலகால் எடுத்துச் செறிக்கின்றெனே.
பிரியம்வதை : (நினைந்துபார்த்து) ஏடி! இவள் தன் காதலைத் தெரிவித்து ஒரு முடங்கல் எழுதட்டும்; அதனை மலர்களின் டையே மறைத்துக் கொண்டுபோய்க் வுளுக்குப் படைத்தது என்று அவர் கையிற் கொடுத்து விடுகிறேன்.
அனசூயை : இந் நேர்த்தியான ஏற்பாட்டை நான் ஒத்துக் கொள்கின்றேன்; ஆனாற் சகுந்தலை யாது சொல்லு
கின்றாளோ?
சகுந்தலை
- நீங்கள் சொல்வதை நான் ஐயுற்று வினவுவதும் உண்டோ?
பிரியம்வதை : அப்படியானால் நல்லது, நீ உன் காதலைக் காட்டி அழகிய சொற்களால் ஒரு பாட்டு எழுதுவதற்குக் கருது.
சகுந்தலை : அப்படியே செய்கிறேன்; ஆனால் அவர் என்மேற் பற்றின்றித் தவிர்த்து விடுவரோ என எண்ணி என் நெஞ்சம் நடுங்குகின்றது.