54
அரசன்:
மறைமலையம் 6
உன்மேற் பற்றின்றி உவர்ப்பான் எவனென உன்னினையோ அன்னான்நின் கூட்டம் விழைந்திங்குளான் அஞ்சும் ஆரணங்கே பொன்னாள் தனைநயப் போனை மறுப்பினும் போவதற்கம்
மின்னாள் விரும்பப் படுவோன் அவளை வெறுத்தலின்றே.
தோழிமார் : தன்னுடைய நலங்களைத் தானே இகழ்ந்து பேசுகிற ஓ தோழீ! உடம்பைக் குளிரச் செய்கின்ற வேனிற் கால முழுமதி நிலவை யார் தாம் தம் ஆடை முன்றானையால் மறைப்பர்?
சகுந்தலை : (புன்சிரிப்போடு) நல்லது; இ ப்போது நான் செய்யுள் இயற்றத் தொடங்குகின்றேன். (இருந்து எண்ணு கின்றாள்.)
அரசன்:
நொடிசிமிழா விழியால்என் காதலியை நோக்குங்கால்
வடிதீஞ்சொற் றொடர்தொடுக்கும் வண்மையில் அன்னாள்முகத்துக் கொடிபோல் ஒருபுருவம் மேல்நெறிந்து குலவியிடப்
பொடியுங் கதுப்பென்மேற் காதல் புல னாக்குமால்.
சகுந்தலை : தோழிகாள்! ஒரு செய்யுளை எண்ணி இயற்றி விட்டேன்; ஆனால், எழுது கருவிகள் அருகே இல்லையே.
பிரியம்வதை : கிளிப்பிள்ளையின் மார்புபோல் மெதுவா யிருக்கின்ற இத் தாமரை இலையின்மேல் உன் நகங்களால் அப் பாட்டுப் பொறிக்கப்படட்டுமே.
சகுந்தலை : (அப்படியே செய்து) தோழிகள்! இப்போது இதன் பொருள் பொருத்தமா யிருக்கின்றதா? கேளுங்கள்.
இருவரும் : அப்படியே உன்னிப்பா யிருக்கின்றோம். சகுந்தலை : (படிக்கின்றாள்)