பக்கம்:மறைமலையம் 6.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

இரக்கமிலா அரசே! நான் என்செய்வேன்! இரவுபகல் எரிக்கின்றா னென்உடம்பை எழிற்காமன் நின்மேலே பெருக்கின்ற தென்காதல் பேதையேன் நின்நெஞ்சம் இருக்குமா றுணர்ந்திலேன் எனக்கதனை இயம்புதியோ. அரசன் : (உடனே அவளிடம் போய்)

மெல்லியலாய்! நின்னையவன் மென்மேலும் எரிக்கின்றான், சொல்லவொணா வகையாக என்னையோ சுடுகின்றான்; அல்லொழிந்த விடிநாளில் அழிமதியை வாட்டுதல்போல் எல்லவன்மற் றதன்மனை அல்லியை வாட்ட லில்லையே.

55

தோழிமார் : (அரசனைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு எழுந்து) காலந் தாழாது எம் விருப்பப்படி வந்த அரசர்க்கு நல்வரவாகுக!

(சகுந்தலையும் தன் மலர்ப் பாயலினின்று எழ

அரசன்

லிரும்புகின்றாள்.)

வேண்டாம், வேண்டாம். வருத்தப்பட்டு எழுந்திருத்தல் வேண்டாம். நங்காய்! மிகுந்த வெப்பத்தால் வருந்துகின்ற நின் உறுப்புகள் பட்டு இம் மலர்ப் பாயல் தீய்ந்து போயிருக்கின்றது; மேலும் அவற்றின் கீழ்ச் சிதறிக் கிடந்து விரைந்து வதங்குகின்ற தாமரை இதழ்களால் அவை மணம் ஊட்டப்பட்டிருக்கின்றன; இத்தன்மையாக இருக்கும் அவை என்னை வரவேற்றற் பொருட்டு மேலும் வருத்தப்படுவது தகாது.

அனசூயை : எங்கள் தோழர் எங்கள்மீது அருள் கூர்ந்து இந்தக் கற்பலகைமேல் ஒருபுறம் இருப்பாராக.

(அரசன் அவ்வாறே இருக்கச் சகுந்தலை நாணத்தோடும் எழுந்து நின்றகின்றாள்.) பிரியம்வதை : உங்களிருவர்க்கும் உள்ள நேச மையானது தெற்றென விளங்குகின்றது; ஆயினும் என் தோழிமேல் உள்ள அன்பானது என்னை அதனையே திரும்பவும் பேசும்படி செய்கின்றது.

உரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/86&oldid=1577145" இலிருந்து மீள்விக்கப்பட்டது