பக்கம்:மறைமலையம் 6.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் 6

அரசன்

நன் மாதராய்! அஃது அடக்கிவைக்கப் படுதலாகாது; பேசவேண்டுவது பேசப்படாவிட்டாற் பின் அது நினையும்போது வருத்தத்தை விளைக்கும்.

பிரியம்வதை : தன் செங்கோல் நீழலின்கீழ் வாழ்வார்க்குத் துன்பம் நேர்ந்தால் அதனைத் துடைக்க வேண்டுவது அரசற்கு உரிய பெருங் கடமையாமே.

அரசன் : அதைவிட வேறென் இருக்கின்றது?

பிரியம்வதை : அப்படியாயின், இதோ எங்கள் அன்பிற் சிறந்த தோழி உங்கள் பொருட்டுத் தெய்வக் காமனால் இங்ஙனம் வேறுபட்ட நிலையடையலானாள்; ஆகையால், அவள்மேல் தலையளி புரிந்து அவளுயிரைக் காப்பாற்றி யருளும்.

அரசன் : நல்லாய்! இவ் வேண்டுகோள் நம் இருவர்க்கும் பொதுவே யாகும்; ஆயினும், பலவகையாலும் நான் உங்கட்குக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

சகுந்தலை

(பிரியம்வதையைப் பார்த்து) தமது உவளகத்திலுள்ள மகளிரைப் பிரிந்தமையால் வருந்தி இருக்கின்ற இவ் அரசரை வருத்தப்படுத்த வேண்டாம், விடு.

அரசன் :

ஒருபொழுதும் என்உளத்திற் பிரியாதாய்! உனைக்காண்பார் மருளமனம் பேதுறுக்கும் மதர்விழியாய்! நினையன்றிப் பெரியபொருள் பிறிதறியா என்நெஞ்சைப் பிறிதறிந்தால் எரிவேடன் கணைகொல்ல இனைகின்றேன் பிழைப்பெனோ

அனசூயை : நண்பரே! அரசர்க்குக் காதற் கிழத்திமார் பலர் இருப்பரெனக் கேள்வியுற் றிருக்கின்றோம். எங்கள் அன்புள்ள தோழியைப்பற்றி அவள் உறவினர் துயரம் அடையாதவாறாய் நீர் நடந்துகொள்ளும்படி வேண்டுகின்றோம்.

அரசன் : நல்லாய்! மிகுதியாய்ச் சொல்லவேண்டுவ தென்? எனக்குக் காதற்கிழத்திமார் பலர் உளரேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/87&oldid=1577146" இலிருந்து மீள்விக்கப்பட்டது