சாகுந்தல நாடகம்
63
பிரியம்வதை : (பூங்கூடையைப் பார்த்து) தோழி! வழிபாட்டுக்கு வேண்டுமான பூக்கள் பறிக்கப்பட்டாயின வென்று நினைக்கின்றேன்.
வ
அனசூயை : சகுந்தலையின காவற்றெய்வத்தை வழி பட வேண்டுவதும் உனக்குத்தான் தெரியுமே.
.
பிரியம்வதை : உண்மைதான். (இருவருந் திரும்பவும் பூப்பறிக்கின்றனர்.)
(திரைக்குப் பின்னே)
ஓ நான் இங்கு வந்திருக்கின்றேன்!
அனசூயை : (உற்றுக்கேட்டு) தோழி! விருந்தினர் யாரோ தமது வரவைத் தெரிவிப்பதுபோல் தோன்றுகின்றது.
பிரியம்வதை : சகுந்தலை குடிலில் இருக்கின்றாளே; ருக்கின்றாளல்லவா?
அனசூயை : ஆனால், அவள் மனநிலையைப் பற்றி எண்ணினால், அவள் இன்று இங்கில்லை. அத்தனை பூக்கள் போதும்.(இருவரும் புறப்படுகின்றனர்.)
ஆ! விருந்தினை ஒம்பாது பராமுகஞ் செய்தோய்! தவச் செல்வத்தை யுடைய யான் இங்கு வந்திருப்பதும் அறியாமல் நின்மனம் எவன் வயப்பட்டு எவனையே நி நினைந்து காண்டிருக்கின்றதோ அவன் கள்ளுண்டு மயங்கினோன்
முன் பட்டாலும் நின்னை நினையாதொழிக!
பேசியதை நினையாமைபோல நினைவூ
டப்
பிரியம்வதை : ஐயையோ! முன்பேசியபடியே நேர்ந்து விட்டதே! சகுந்தலை தன்மனம் இங்கில்லாமையால் வழிபடத் தகுந்த யாரோ ஒருவர்க்குப் பிழைசெய்து விட்டனளே!
அனசூயை : (முன் நிமிர்ந்துபார்த்து) மெய்யாகவே அவர் பொதுமக்களுள் ஒருவரல்லர். மிக எளிதிலே சீற்றங்கொள்ளுந் துருவாசமாமுனிவ ரல்லரோ! அவ்வாறு வைதுவிட்டு எவராலுந் தடுக்கவொண்ணாத கடுநடையொடு திரும்பிப் போகின்றார்.