64
மறைமலையம் -6
பிரியம்வதை : கொளுத்துந் தன்மை நெருப்பைத் தவிர வேறு எதற்குண்டு? நீ விரைந்துபோய் அவர் அடியில் விழுந்து அவரைத் திரும்பிவரும்படி செய்; இதற்குள்ளாக நானும் அவர் திருவடி கழுவுதற்குத் தண்ணீர் ஒழுங்கு செய்கின்றேன்.
அனசூயை : அப்படியே (போய்விடுகின்றாள்.)
பிரியம்வதை : (ஓரடி யெடுத்துவைக்கையி லிடறிவிழுந்து) ஐயோ! விரைந்து சன்றதனால் யான் தடுக்கி விழ,
என்கையிலிருந்த பூங்கூடைவழுவி விழுந்துவிட்டதே. (பூக்களை ஒன்றுசேர்த் தெடுக்கின்றாள்.)
(அனசூயை வருகின்றாள்)
அனசூயை : அவர் இயற்கையிலே கோணலான தன்மை யுடையராதலால் யாருடைய வேண்டுகோளுக்குத் தான் செவிகொடுப்பார்? ஆயினும், சிறிது இரக்கங் காட்டும் படி செய்யப்பட்டிருக்கின்றார்.
பிரியம்வதை : அவர் மட்டில் வ்வளவே மிகுதி! எப்படிச் செய்தாய் சொல்.
அனசூயை : அவர் திரும்பிவர மனமில்லாமை கண்டு இவ்வாறு அவரை மன்றாடிக்கொண்டேன். “தெய்வத் தன்மையுள்ள ஐயரே! தவத்தின் ஆற்றல் இன்னதென்றறியாத நும் புதல்விசெய்த இவ்வொரு பிழையை முதன் முதற் செய்ததென்று கருதி, பெருமானே! அதனைப் பொறுத்தருளல் வேண்டும்” என்பதே.
பிரியம்வதை : ஆம், அதன்பிறகு என்ன?
66
அனசூயை : அதன்பிறகு என் சொல் பிழையாது; ஆயினும், நினைவுகூர்தற்கு அடையாளமான ஓர் அணிகலத்தைக் காண்டலும் அவ் வசவு நீங்கும்" என்று சால்லிக் கொண்டே சடுதியில் மறைந்துபோயினார்.
பிரியம்வதை : அப்படியானால் நாம் சிறிது நம்பியிருக்க இடமுண்டு. நம் வேந்தர் பெருமான் புறப்படுங் காலத்து நினைவுகூர்தற்கு அடையாளமாகத் தம்பெயர் பொறிக்கப்