பக்கம்:மறைமலையம் 7.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

முனிவன்,

மறைமலையம் - 7

"தானாகவே பதைத்துச் செய்த ஒரு செய்கையானது ப்படித் தான் துயரத்தைத் தரும், ஆதலால், மறைந்த சேர்க்கையானது நன்கு ஆராய்ந்தறிந்த பின்னரேதான் செயற்பாலது. மனவியற்கை நன்கு தேறப்படாதாரொடு கொண்ட நட்புப் பகையாய் முடிகின்றது.” (89) என்று கூறிய மொழியானும் ஆசிரியர் காளிதாசர் நன்கு விளங்கவைத்துளா ரன்றோ? என வினவிற் கூறுதும்.

“புனலோடும்வழிப் புற்சாய்ந்தாற்போலக்” காதல் சென்ற வழியே உள்ளமுஞ் சென்று மணங்கூடுலே கழிபெருஞ் சிறப்பிற் றென்பாருங், காதல் சென்ற வழியே உள்ளமுஞ் சென்று காடுப்பாரும் அடுப்பாருமின்றி மணத்தல் நன்றா காது, மற்ற ஒருவர் ஒருவர் மனநிலையினை நன்காய்ந்து பார்த்து உற்றார் பெற்றார் கொடுப்பக்கொண்டு மணம் புரிதலே நன்று, என்பாரும் என இருபாலாசிரியர் உளர், அவர் தங் கோட்பாடுகளுள் ஈண்டு ஆசிரியர் முன்னையதைத் தழீஇ இந்நாடக நூல் யாக்கப் புகுந்தா ரல்லது, பின்னையதைத் தழீஇ அது செய்திலர். மக்கள் மனவியற்கையினை நன்காய்ந்து பாராது, தாங் கற்ற நூலறிவு ஒன்றுமேகொண்டு ஒருசாரா சிரியர் (இவர் புத்தசமண் ஆசிரியரும் அவரையொத்த ஆரிய நூலாசிரியரும்) கோட் பாடேபற்றி அறிவாராய்ச்சிக்கு முதன்மை தந்து நிற்பாரே ஆராய்ச்சியின் வழித்தாக மணம் நடைபெறல் வேண்டும் என்ப. மற்று, நூலறிவோடு, மக்கள் மனவியற்கையினைத் துருவி யாராய்ந்து காணும் உலகியல் நுண்ணுர்வும் ஒருங்குடை யாரோ காதலன்பின் வழித்தாக மணம் நடைபெறல் வேண்டும் என்ப. ஆசிரியர் காளிதாசர் நூலறிவோடு உலகியல் நுண்ணுணர்வும் ஒருங்கு வாய்த்த நல்லிசைப் புலவராதலால் அவர் இயற்கைக் காதல் அன்பின் வழித்தாக நடைபெறுந் தூயமணத்தின் விழுப்பந் தேற்றுதற்கே இந்நாடகநூல் யாத்திட்டார். அற்றாயிற், காதல் வழித்தான சகுந்தலையின் மணம் இடர் பயந்தவா றென்னையெனின், நூலறிவு ஒன்றுமே யுடையார் அஃது ஆராய்ச்சியின் வழித்தாக நடை பெறாமையின் அவ்வாறா யிற்றென முடிவு கூறுவர். மற்றுக், காளிதாசரோ காதன்மணமும் இழுக்குவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/101&oldid=1578168" இலிருந்து மீள்விக்கப்பட்டது