பக்கம்:மறைமலையம் 7.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

77

ஊழ்வினையின் வலியாலென்று முடிவுகட்டுவர். இவ்வாறு ரைக்கும் இரு பாலாசிரியரில் எவர்பக்கம் வலியுடைத் தெனின், காளிதாசர் பக்கமே வலியுடைத்து, யாங்ஙனமெனிற் காட்டுதும், உலகத்தவரிற் பெரும்பாலார் குலனுங் குடியுங் குணனுங் கோள்நிலையும் எல்லாம் பலவாற்றானும் நன்காராய்ந்து பார்த்தே இருவரை வாழ்க்கைப் படுத்து கின்றனர். அங்ஙனம் வாழ்க்கைப்படுத்தப்பட்ட மணமக்கள் வாழ்க்கை யிலும் இழுக்கு நேர்ந்தக்கால் (இவ்வாறு இழுக்கு நேர்தல் ஒரு குடும்பத்தினர் மாட்டன்றிப், பல்வகைக் குடியினர் மாட்டும் அடுத்தடுத்து நிகழக் காண்கின்றாம்), அங்ஙனம் இழுக்குண் டானது ஆராய்ச்சியின் குற்றமன்று, அஃது ஊழ்வினைச் செயலே யாமென ஆராய்ச்சிக்குத் தலைமை கூறுவாரும் முடிவுகூறுநிற்கின்றனர். என்று, ஆராய்ச்சியால் நிகழ்ந்த மணவாழ்க்கையிலாதல், காதலன்பால் நிகழ்ந்த மணவாழ்க்கை யிலாதல் இழுக்கு வந்தக்கால் அதற்குக் காரணம் பழவினையே என்று இருதிறத்தாசிரியரும் முடிவு கூறக் காண்டலால், மனைவியுங் கணவனுமாகிய இருவருள் ளமும் அன்பினால் ஒன்றாய்ப் பிணிப்புண்டு மேற்கொளற் பாலதான இல்லற வாழ்க்கைக்குக் காதலன்பின் வழித்தான் மண வாழ்க்கையே வேண்டற்பாலதாகுமன்றி, அதனைவிட்டு ஆராய்ச்சியின் வழிப்படூஉம் மணவாழ்க்கை வேண்டற் பாலதாகாது என்று துணிந்து கொள்க. அத்தகைய காதன் மணவாழ்க்கையில் இழுக்கு வந்தக்கால் அஃது 6 அஃது ஏனை மணவாழ்க்கையிற்போல ஊழ்வினையால் வந்ததேயாமாகலின் அஃது அதுபற்றி இகழற்பால தன்றென்பதூஉம், அங்ஙனம் ஊழ்வினையால் வந்த தீதுங் காதலரின் அன்புக்குத் துணை யாய் நிற்கும் முழுமுதற் கடவுளருளால் நீங்குமென்பதூஉங், கொடுந் தீவினையாளரான மக்களிடையே வாழத்தகாத அத்துணைப் பெருங் காதலுடைய ராயின் அஃதுடைய இருவரையும் இறைவனே இம் மண்ணுலகினின்றும் அகற்றி விண்ணுலகில் வாழவைப்ப னென்பதூஉம் அறியற்பாற்று ஈண்டுக் காட்டிய காதன் மணவாழ்க்கையின் விழுப்பந் தேற்றுதற் பொருட்டே சகுந்தலையின் மணத்தை ஒரு நாடகமாகத் தொடுத்து நங் கட்புலனெதிரே காட்டுவான் புகுந்த ஆசிரியர், அம் மணத்தினிடையே புகுந்த இடர் துருவாசரிட்ட சாபத்தினூடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/102&oldid=1578177" இலிருந்து மீள்விக்கப்பட்டது