78
மறைமலையம் - 7
வந்து தன் பயனை விளைவித்த ஊழ்வினையால் நேர்ந்த காதலை நன்குவிளக்கி, அம் மணத்தின் மாட்சியினை இந்நாடக நூல் இறுதிவரையில் நிலை பொறுத்தியிருத்தல் கண்டுகொள்க. எனவே, சார்ங்கரவன் என்னும் மாணவ முனிவன் ஆராய்ச்சி மணத்தின் சிறப்பை யெடுத்துக்கூறியது, காளிதாசரது கருத்தாகாமல், அவரது கருத்துக்கு மாறான ஏனையாசிரியரது கருத்தாய் இடைப் புகுந்தமை தேர்ந்து கொள்ளப்படும். இன்னும், அம் மாணவ முனிவனிலும் அவன்றன் ஆசிரியரான காசியப முனிவர் நூலறிவுடைய ராதலோடு உலகியலும் மக்கள் மனவி யற்கையும் நன்குணர்ந்தவராதலால், அவர்தமது உடன்பாடு பெறாமலே சகுந்தலை துஷியந்தனை மணந்து கொண்டமை தெரிந்து மகிழ்ச்சி மிக்கவராய்,
66
ம
"வேள்வி வேட்குமவன் கண்கள் புகையால் மறைக்கப் படினும், அவனிடும் பலியானது நல்வினை வயத்தால் நெருப்பில் நேரே விழுந்தது; என்னருமைக் குழந்தாய் தகுதி யுள்ள மாணாக்கனுக்குக் கற்றுக்கொடுத்த கல்வி போல நீயும் எனக்குக் கவலை தராதவளானாய், இன்றைக்கே துறவிகளைத் துணையாகக் கூட்டி நின்னை நின் கணவனிடம் போக விடுகின்றேன்.” (66) என்று கூறி அவளை ஏன்று கொள்ளுதல் காண்க. இவ்வாற்றால் முதிர்ந்த அறிவுடைய சான்றோர்க் கெல்லாங் காதன் மண வாழ்க்கையே விழுமிய தென்னுங் கருத்துளதாதல் நன்கு விளங்குதலால், அவ் வாழ்க்கையிற் புகுந்த சகுந்தலைக்கு அஃதொரு பெருஞ் சிறப்பினைத் தருவதல்லாற் சிறுமையினைத் தருவதன்றென்பது கடைப் பிடிக்க. அற்றேற், சகுந்தலையாற் காதலிக்கப் பட்டவனான துஷியந்தன் அவடன் தூய பேரன்பிற்குத் தக்கவன்றானோ வெனின்; தக்கவன்றானே யாவன். யாங்ஙனமெனிற் காட்டுதும்.
ய
துஷியந்தமன்னனது யாக்கை வலிமையிலும் அழகிலுஞ் சிறந்து விளங்குவதென்பது, அவனைக் கண்டு வியக்கும் படைத் தலைவனது உரையாலும் (30), கஞ்சுகி யென்போன்,
“ஆ! எந்தவகையான நிலையிலும் அழகிய வடிவமானது எவ்வளவு அழகாக விளங்குகின்றது! அவ்வளவு கவலையோடு கூடியிருந்தாலும், அரசன் கண்ணைக் கவரத் தக்க தோற்றமுடையராகவே யிருக்கின்றார்!' என வியந்துரைக்கும்