சாகுந்தல நாடக ஆராய்ச்சி
79
மொழியாலும் (107), தேவமாதான சானுமதி யென்பாள் மறைந்திருந்து இவனது வடிவழகைக் கண்டு வியந்தவளாய்ச், “சகுந்தலை இவரால் தள்ளப்பட்டு வருந்தினாலும், அவள் இவரை நினைந்து உருகுதல் தகுதிதான் என்று நுவலுஞ் சொல்லாலும் (108) நன்கு விளங்கா நிற்கின்றது. இவனைக் கண்ட அப்பொழுதே சகுந்தலை இவன்மேற் பெருங் காதல் காண்டு, அவனைப் பெறாத நாள்வரையிற் பெருந் துயருழந்தமை, அவள் அரசனுக்கென்று வரைந்த,
“இரக்கமிலா அரசே! நான் என்செய்வேன்! இரவுபகல் எரிக்கின்றா னென்உடம்பை எழிற்காமன் நின்மேலே பெருக்கின்ற தென்காதல் பேதையேன் நின்நெஞ்சம் இருக்குமா ருணர்ந்திலேன் எனக்கதனை இயம்புதியோ”
என்னுஞ் செய்யுளாற் றெற்றெனப் புலனாதலால் இவனது பேரழகின் மாட்சியினை மேலுங் கூறுதல் எற்றுக்கு?
இத்துணைச் சிறந்த புறவியற்கையுடை யனாதல் போலவே, இவன் மிக விழுமிய அகவியற்கையுமுடையனாகக் காணப்படு கின்றான். உயர்ந்தோரைக் காணுமளவிற் பணிந்து அவரது சொல்லுக்கு அடங்கியொழுகும் இவனது சிறந்த இயல்பினை ஆசிரியர் இந்நாடக முதல்வகுப்பின் துவக்கத்தி லேயே புலப்படுத்துகின்றார். விரைந்து செல்லும் ஒரு தேர் ஊர்ந்து கானகத்தே ஒரு மானைப் பின்றொடர்ந்து அதனை எய்தற்கு இவன் முனையும் நேரத்திற் குறுக்கே வந்த துறவிகளைக் காண்டலுந் தன்றேரைக் கதுமென நிறுத்தி, அவர் பணித்தவாறே அம்மானைக் கொல்லாது விட்டு, அவராற் புகழ்ந்து வரங் கொடுக்கப்பட்டமை காண்க (6). இவ்வாற்றால் இவன் சகுந்தலைக்குத் தக்க காதலனே என்பது ஆசிரியர் முதலிலேயே குறிப்பித்தாராயிற்று.
க
இம்மன்னன் இதற்குமுன் கானகத்தின் இயற்கைக் காட்சிகளையுங், கானகத்து உறையுந் துறவோர் குடிக்குரிய மகளிரினழகையும் பார்த்தவனாகப் புலப்படவில்லை. ஆயினும், இயற்கைத் தோற்றங்களையும் அவற்றின் வனப்புகளையுங் கண்டு L மகிழ்வதிற் கிளர்ச்சி மிக்கதாயிருக்கின்றது. தன்னாற்
இவனது
உள்ளமானது