80
மறைமலையம் - 7
பின்றொடரப்பட்டுத் தனக்கு முன்னேயோடும் மானின் நிலையினையுந் (4), தனது தேரின் விரைந்த செலவினால் தனக்கெதிரே தோன்றும் நிலத்தின் றோற்றங்களையுங் (5), காசியபரது தவப்பள்ளியைக் கண்டு அதனைக் குறிப்பனவாக இவன் கூறும் அடையாளங்களையுஞ் (7,8), சகுந்தலையின் உடம்பின் அமைப்பிற்கு இவன் எடுத்துக்காட்டும் இயற்கைப் பொருள் உவமைகளையும் (11), (11), இவன் சகுந்தலையின்
வடிவழகைத் தீட்டும் ஓவியத்தில் அதனோடு உடன் சேர்த்து வரைய விரும்பின இயற்கைப் பொருட்டோற்றங்களையும் (109), இன்னும் இவைபோல் இவன் ஆங்காங்கு எடுத்துரைக்கும். இயற்கைப் பொருட் குறிப்புக் களையும் உற்று நோக்கவல்லார்க்குச் செயற்கையாயின்றி இயற்கையாய்க் காணப்படும் அழகிய காட்சிகளில் இவனதுணர்வு கவரப்பட்டு நிற்றல் நன்கு விளங்கும். இயற்கையழகிலே இறைவனது அருளறிவின் விளக்கமுஞ், செயற்கை யழகிலே மக்களது நுண்ணுணர்வின் துலக்கமும் நிகழக் காண்டலாற், சயற்கையழகினை வியப்பாரிலும் இயற்கை யழகினை
வியப்பாரது உள்ளமே கழிபெருந் தூய்மையும் அருட்டன்மையும் உடையதாகும். மக்களாற் செய்யப்படுங் கன்னற் சுவையை விழைவாரினும், இறைவனால் ஆக்கப்பட்ட பூந்தேன் சுவையை விழையும் அருந்தவத்தோர் மாட்சியினை அறியாதார் யார்? இங்ஙனமே, தன் நகரத்தின் கண்ணவான அழகிய செயற்கைக் காட்சிகளைவிடக், கானகத்தின் கண்ணவான விழுமிய இயற்கைக் காட்சிளைக் கண்டு வியக்குந் துஷியந்தனது தூய வுள்ள மாட்சியும் அறியற்பாற்று.
இனி, அஞ்ஞான்றை வழக்கப்படி இவ்வரசனுக்கு ‘வசுமதி” என்னும் பட்டத்தரசி யொருத்தியுங் காமக் கிழத்தியர் பலரும் இருந்தனராயினும், அவரெல்லாம் அழகியராகவே விளங்கின ராயினும் அவர்தஞ் செயற்கை யழகுஞ் செயற்கைக் குணனும் இவனதுள்ளத்தைக் கவர மாட்டாவாயின; அதனால் இவன் அவர்கள்பாற் காதலன்பு கொண்டவனுமல்லன். எல்லா உயிர்கள் மாட்டும் பொதுவாகக் காணப்படுங் காமவிருப்பமே இவனுக்கும் அவர்கள்பால் இருந்ததாகல் வேண்டுமல்லால், ஓராவிற்கு இருகோடு தோன்றினாற்போல ஈருடம்பின் ஓருயிராய்க் கருதுங் தூய காதலன்பு இவனுக்கு அவர்கள்பால்