சாகுந்தல நாடக ஆராய்ச்சி
81
இருந்ததில்லை. ஆகவே, இவன் சகுந்தலையின் இயற்கை வனப்பைக் கண்ட அப்பொழுதே அவள்பாற் பதிந்த காதலன்பு கொளப்பெற்று, அதனாற் றன் கண் ணுங் கருத்தும் ஒருங்கே கவரப்பெற்றா னென்பது. இவன் தன் அரண்மனையிலுள்ள மகளிரைவிடத் தான் கானகத்திற் கண்ட மகளிரையே மிகவியத்தல்,
66
ஓ! இப்பெண்கள் பார்வைக்கு எவ்வளவு அழகாய் இருக்கின்றார்கள்! முல்லைக்காட்டுத் துறவோர் குடியில் உறைகின்ற மகளிர்க்குள்ள பேரழகு அரண்மனை யுவள் கத்திலேயுங் காணப்படுவதில்லா அத்துணை அருமைத் தாயின், ளங்காவின் மலர்க்கொடிகள் குணத்தாற் சிறந்த காட்டுப் பூங்கொடிகட்குப் பின்னிடைதல் வாய்வதேயாம்" (10) என்று இவன் மொழியும் உரையால் தெற்றென விளங்குதல் காண்க.
தனக்கு
இவ்வாறு சகுந்தலைமேல் தாங்கொணாப் பெருங்காதல் கொள்ளப்பெற்றா னாயினுந், தன்னாற் காதலிக்கப்பட்ட அவள் மனையாளாதற்குத் தக்கவள் தானா என்று ஆராய்ந்தறிந்தபின்னன்றி அவளை இவன் மணந்து கொள்ளத் துணியாமையினை உணர்ந்து பார்க்குங்கால், இவன் ஆடவரிற் சிறந்தார்க்குரிய பெருமையும் உரனுமாகிய இயற்கைக்குணங்கள் உடையானென்பது விளங்காநிற்கும். தொல்லாசிரியராகிய தொல்காப்பியனாரும்,
“பெருமையும் உரனும் ஆடூஉ மேன
(கனவியல். 7)
என்று உயர்ந்த ஆண்மகற்குரிய குணங்கள் இவையே யாதல் தெளியக் கூறினார். இத்தொகைக் குணங்களைப் பகுத்துக் காட்டுவான் புகுந்த உரையாசிரியர் நச்சினார்க்கினியர், அறிவும் ஆற்றலும் புகழுங் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியுங், கடைப்பிடியும் நிறையுங் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும் என அவ்விரண்ட னுள் அடங்குங் குணங்கள் பலவற்றையுந் தெளிவுறுத்தினர். ஆகவே, ஆடவரிற் சிறந்தார்க்குரிய ஆராய்ச்சியறிவு இவன்பால் மிக்கு நிகழ்தல் இந்நாடகநூலில் ஈண்டும் ஏனைப் பலவிடங்களிலுங் கண்டுகொள்க (17, 20, 23, 135, 136).