பக்கம்:மறைமலையம் 7.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் - 7

அரசன்

தன்

இன்னும், ஆராய்ந்து சகுந்தலை தனக்கு ஏற்றவள் தான் என்றும், அவளுந் தன்பாற் காதலுடையவள் தான் என்றுந் தெரிந்து ஒரு முடிவுக்கு வரும்வரையில் உள்ளத்தைக் காதல்வழிச் செல்லவிடாது, ஆராய்ச்சி யறிவின்வழி நிறுத்துந்திறம் பெரிதும் பாராட்டற்பாலது. இஃது உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் உரன் என்னும் அறிவுவலிமையா மென்க. இங்ஙனம் ஐம்புலவழிச்செல்லும் ஐந்தவாக்களைத் தன் அறிவுவலிமையால் அடக்க வேண்டு மிடன் அடக்கி விடுக்க வேண்டுமிடன் விடுக்கும் ஒருவன் இறைவன தருள்நிலத்திற் பதிந்து முளைக்கும் ஒரு வித்தாகுவன் என்று ஆசிரியர் திருவள்ளுவர்,

'உரன்என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து."

என்னுந் திருக்குறளில் ஓதியருளினார். இத்துணை உள்ள வலிமை யுடையனாதல் பற்றியே துஷியந்தன் இந்நூலுள் ஆங்காங்கு “அரசமுனிவர்” என்று அழைக்கப்படுவானாயின

னென்க.

இனி, இத்துணைச் சிறந்த குணங்கள் உடையாரிற் பலர் தமது மேன்மையினைத் தாம் அறியாரா யிருத்தலை உலகநடையில் ஆங்காங்குக் காணலாம். ஆனால் துஷியந்த மன்னனோ தனது உள்ளப்பெருமையினைத் தானே நன் குணர்ந்தவனாயிருக்கின்றான். சகுந்தலை தனக்கேற்ற காதலியாகுவளோ என முதலிற் சிறிது ஐயுற்ற இவன் பின்னர்த் தன் உள்ளப் பெருமையினை நினைந்து,

“அல்லது நான் ஏன் ஐயப்பட வேண்டும்? என் சிறந்த உள்ளமும் இவள்மேற் காதலுற்று விழைந்தமையால், ஐயமின்றி வள் அரசகுடியினருடன் மணங்கூடத் தக்கவளேயாவள். ஏனெனில், ஐயப்படுதற்கு ஏதுவான நிகழ்ச்சிகளில் நல்லோர் தம் உள்ளம் எந்தப்பக்கத்திற் சாய்கின்றதோ அதுதான் மேற் கொள்ளற் பாலது” என்று அதன் பிழைபடாச் செயலினை எடுத்துரைத்துக் கொள்ளுதல் காண்க. எவன் தனக்குள்ள குற்றங் குணங்களைத் தானாகவே உணர்ந்துபார்க்க வல்லவனா யிருக்கின்றனனோ, அவனே பிறர்க்குள்ள குற்றங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/107&oldid=1578218" இலிருந்து மீள்விக்கப்பட்டது