பக்கம்:மறைமலையம் 7.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

83

தன்

குணங்களையும் நன்கு பகுத்தறிய வல்லவனாவன். எவன் தன் குற்றத்திற்காகத் தன்னை வெறுத்துத் தன்னைச் சினந்துகொள்ள மாட்டாமை யுணர்கின்றானோ, அவனே பிறர்பாற் காணப்படுங் குற்றத்திற் காகப் பிறரை வெறுத்து அவரைச் சினத்தலுஞ் செய்யான். எவன் தன் குற்றத்தைப் பிறர் எடுத்துரைக்குங்காற் றன் மனம் உளைதலையுந் குணங்களை எடுத்துரைக்குங்கால் அது மகிழ்வின் விளைதலையும் உணர்ந்து பார்க்கின்றானோ, அவனே பிறர் குற்றங்களைக் கிளறிச்சொல்லி அவர் நெஞ்சைப் புழுங்கவையானாய் அவர்தங் குணநலங்களை நவின்று அவரை மகிழவைப்பனென்க. எனவே, துஷியந்தமன்னன் தன் அகவியற்கை யினைத் தானே அளந்துணருஞ் சிறந்த உணர்ச்சி வாய்ந்தவனாய் இருத்தலினாற்றான், தன் குடிமக்களிடத்தும் மிக்க அன்புடையனாய் அறத்தின் வழுவாது அரசு செலுத்தினானென்று அறிதல்வேண்டும்.

அற்றேலஃதாக, இவ்வரசன் தன் உள்ளத்தின் உயர்வைத் தானே யுணர்ந்தாற்போல அதனிழிபையும் உணர்ந்த துண்டே வெனின், உண்டு. சகுந்தலையைக் கானகத்தில் மணந்து, பின்னர் அவளைப் பிரிந்து அவன் தன்நகர்க்கு மீளுங்கால் அவளுக்குத் தான் சொல்லிவந்த சொல்லைத் தானே மறந்துபோயது குறிப்பிட்டுப் “பின், கல்நெஞ்சுடை யனான நான் மறதியினால் அவ்வாறு செய்யத் தவறி விட்டேன் என்று கூறுமாற்றல், அவன் தனக்குள்ள குறை பாட்டையும் உணர்ந்தவனாக காணப்படு கின்றானென்க. இவனிடத்தில் இச்சிறு குறைபாடன்றிப் பிறிது ஏதும் இன்மையால், இல்லாதவற்றைப் பற்றிய குறிப்பு இந்நூலின்கட் காணப்படாதது வாய்மையேயா மென்பது.

அத்துணைச் சிறந்த உள்ளம் உடைமையினாலேதான், இவன் முதன்முதற் சகுந்தலையையும் அவடன் றோழி மாரையுங் கண்டு உரையாடுங்கால், தன்னை அரசன் என்று அவர்கட்குத் தெரிவித்துக் கொள்ளாமல், அவ்வரசற்குத் தான் ஓர் ஏவலாள் என்றுமட்டுந் தெரிவிக்கின்றான் (17). ஏனென்றால், அரசனே தமக்கு முன்வந்து நிற்கின்றா னென்பதை யுணர்ந்தால், இயற்கையிலேயே அச்சமுடைய அம்மகளிர் திடுக்கிட்டு வருக்கொள்வர். அதனாற், சகுந்தலை இவன்மேற் காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/108&oldid=1578227" இலிருந்து மீள்விக்கப்பட்டது