பக்கம்:மறைமலையம் 7.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

85

மேற்கொண்டு வந்திருப்பவன் துஷி யந்த மன்னனே யென்று ஆ ண்டுறையும் முனிவர்கள் அறிந் தமை வழிநாட்களில் அவனுதவியை நாடி அவன்பால் வந்த முனிவர் புதல்வரி ருவரின் உரையால் தெளியக்கிடக்கின்றது (38). வந்திருப்பவன் துஷியந்த மன்னனே யெனுஞ்செய்தி ஆசிரமத்திற் பரவவே, தன்னாற் காதலிக்கப்பட்டவன் அவ் வரசனேயல்லால் அவ்வரசன்றன் ஏவலன் அல்லன் என்பதூ உஞ் சகுந்தலைக்கும் அவடன் றோழிமார்க்கும் விளங்கிய தாகல் வேண்டும். ஆதலினாற்றான் சகுந்தலையை அவடன் றோழிமார் அவனுக்கு ஒப்படைக்குங் கால், “தமது உவளகத்தி லுள்ள மகளிரைப் பிரிந்தமையால் வருந்தியிருக்கின்ற இவ்வரசரை வருத்தப்படுத்த வேண்டாம், விடு" என்று சகுந்தலை புலந்து கூறாநிற்ப, அரசன் உண்மையை ஒளியாமல், "எனக்குக் காதற் கிழத்திமார் பலர் உளரேனும், என் குலத்திற்கு நிலைபெறச் சிறத்தற்கு உரியார் இருவரே யாவர்; இக்கடலை அரைப்பட்டிகையாக உடைய நிலமகள் ஒருத்தி, உங்கள் தோழி ஒருத்தி” என்று சொல்லித் தன் மனத்துறுதியை வற்புறுத்துகின்றான். தான் சொல்லிய இவ்வுறுதிமொழி தன் நினைவை மறைத்த மறதியால் இடையே தவறியதாயினும், அம்மறதி நீங்கியபிற் மொழிந்தவாறே சகுந்தலையைத் தனக்கு ஒப்புயர்வில்லாப் பட்டத்தரசியாகவே கைக்கொண்டா னென்பது இந்நாடக நூல் இறுதியில் தெற்றென விளங்கா நிற்கின்றது (139).

றான்

முன்

இன்னும், இம்மன்னன் தன் அரசியல் “எக் குலத் தாரையும் எந்நிலையாரையுங் காப்பாற்றிவரும்" (83) முறையில் நடைபெறல் வேண்டுமென்னுங் கருத்துறுதி யுடையன். மலரும் பூங்கொடிகள் மலர் தருங்காலத்து மலராவாயின், அது தன்னுடைய தகாத செய்கைகளால் நேர்ந்திருக்கலாமோ என ஐயுறும் அத்துணை அறவுள்ளம் உடையன், அறத்தின் வழுவாது ஒழுகுதலிலேயே கண்ணுங் கருத்துமாய் இருப்பவ னாகலின், தான் மேற்கொண்ட அரசியலைத் தனக்குத் தொடர்பான துன்பந் தருவதொன் றாகவே கருதி வருந்து கின்றான் (84,85).

இந் நல்லியற்கைகளேயன்றி, நுண்ணறிவும் இவ்வரசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/110&oldid=1578239" இலிருந்து மீள்விக்கப்பட்டது