பக்கம்:மறைமலையம் 7.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

87

(16) மேலுஞ், சகுந்தலையின் பிறப்பு வரலாற்றைச் சிறிதும் ஒளியாமல் எடுத்துரைத்தல் கொண்டும் இவளது கள்ளம் இல் உள்ளப்பான்மை நன்கு உணரப்படும். இவ்வாறு அவளது பிறப்பு வரலாற்றை எடுத்துரைக்கின்றுழி, மகளிர்க்கு இயல்பாக உளள நாணம் இவள்மாட்டும் புலனாதல் காண்டுமாயினும், அந் நாண் இயற்கையினும் இவளது கள்ளமில் இயற்கையே இவள்பால் மிக்குக் காணப்படுகின்றது. கள்ளம் அறியாத மகளிர்க்குள்ள நாணம் அது புலனாதற்குரிய இடத்தன்றிப் புலனாகாது. மற்றுக், கள்ளம் அறிந்தார்க்குள்ள நாணமோ வேண்டாவிடத்தும் வெளிப்பட்டபடியாயிருக்கும். எனவே, கள்ளவுள்ளத்திற்கும் நாண்மிகுதிக்குந் தொடர்புண் டென்பது அறியற்பாற்று. இவ்வாற்றால், இவளைவிட நாண் மிகுதியும் உடைய சகுந்தலையும் பிரியம்வதையுங் கள்ள வுள்ளம் வாய்ந்தவராதலும் அறியப்படும். அற்றேல், இக் கள்ள முடைமை இழிக்கற்பாலதாம் பிறவெனின்; அற்றன்று, நாணமும் அச்சமும் மடனுங் கற்பும் உடைய மகளிரின் உயர்ந்த ஒழுக்கத்தின் பாற்பட்ட கள்ளம் இழிக்கற் பாலதாகாது, மற்று, அம்மெல்லிய பெண்மைக் குணங்கள் இலராய், அவை இன்மையிற் கற்பொழுக்கமும் இலரான பெண்டிர்பாற் காணப்படுங் கள்ளமே இழிக்கற் பாலதாகுமென்று கடைப்பிடிக்க.

L

இங்ஙனம் அனசூயை கள்ளம் இல்லாத இயற்கை யுடையளாயினும், நுண்ணறிவிற் சிறந்தவளாகவே விளங்கு கின்றாள். அரசனை இன்னானென்றறிதற்கு இவள் அவனை வினவும் நுட்பமும் பணிவும் (16), அரசன் முன்னிலையினின்று வெகுண்டாள்போற் செல்ல முனையுஞ் சகுந்தலைக்கு இவள் அறிவு சொல்லித் தடுக்கும் நுட்பமும் இனிய மொழியும் (21). அரசன்மேற் றான்கொண்ட காதலைத் தன்னகத் தடக்கி, அதனால் நோயுற்று வருந்துஞ் சகுந்தலையை அந் நோய்க் காரணந் தெரிதற்பொருட்டு இவள் வினவும் நுட்பமும் (44), பிறவும் ஒருங்குவைத்து நோக்குங்கால் இவளது நுண்ணறிவின் விழுப்பந் தெற்றெனப் புலனாகா நிற்கின்றது.

இத்துணை நுண்ணறி வுடையளா யிருத்தலினாலேயே அனசூயை பின்வருவதை முன்னறிந்து கவல்பவளாய் ருக்கின்றனள், யாழோர் மண முறையிற் சகுந்தலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/112&oldid=1578241" இலிருந்து மீள்விக்கப்பட்டது