88
மறைமலையம் - 7
வ
மணந்து, பின்னர் அவளைப் பிரிந்து தன் நகர்புக்க அரசன் அவளை நினைவு கூர்வனோவென ன் இவள் ஐயுற்றுக் கவல்கின்றாள். சகுந்தலை அரசனை மணந்த யாழோர் மன்றலைக் கண்ணுவ முனிவர் அறிந்தால் யாது செய்வரோ வென அஞ்சிக் கலங்கிய பிரியம்வதைக்கு இவளே தேறுதல் சொல்லி அம்முனிவர் இம்முறையை ஏற்பரென வற்புறுக் கின்றாள் (60). இவள் தனக்குள்ள நுண்ணறிவின் திறத்தினா லேயே, நாற்பக்கங்களிற் கண்ணும் நாற்பக்கங்களிற் செவியும் உடையளாய்த் தன்னைச் சூழ நிகழும் நிகழ்ச்சிகளை உட னே அறிந்துகொள்ளும் அறிவாற்றல் வாய்ந்தவளாய் இருக்கின் றாள். அந்நிகழ்ச்சிகளுள் எதனை அறிந்தாலும் உடனே அதற்குத் தக்கது புரிவதிலும் விரைகின்றாள். சகுந்தலை, பிரிந்து சென்ற தன் காதலனையே நினைந்து தன்னை மறந்த நிலையினளாய்க் குடிலில் இருக்கின்றுழி, அங்குப் போந்த துருவாச முனிவரது வருகையினை அவர் நிகழ்த்திய ஒலியால் அறிந்து, அதனைத் தன் மருங்கிருந்த பிரியம்வதைக்கு அறிவித்து, விருந்தினர் வருகையையும் அறியாத சகுந்தலையின் மனநிலையினையும், எளிதிலே வெகுளத்தக்க துருவாசரது மணநிலையினையும் உணர்ந்து. அவரால் அவட்கு ஏதுந் தீங்கு நேராமைப் பொருட்டு அவரை எதிர்கொள்ளுதற்குப் பிரியம்வதையுடன் விரையும் அனசூயையின் முன்னறிவுஞ் சுருசுருப்பும் பாராட்டற்பாலனவா யிருத்தல் காண்க (62).
பெரிதும்
இன்னும், அனசூயை சகுந்தலையின்பால் வைத்த பேரன்பிற்கும், பிரியம்வதை சகுந்தலையின்பால் வைத்த அன்பிற்கும் வேறுபாடு காணப்படுகின்றது. சகுந்தலை ஒரு சிறு வருத்தமான தொழில் செய்வதைக் கண்டாலும் அனசூயை மனம் வருந்துகின்றாள். சகுந்தலை பூஞ்செடி கட்குத் தண்ணீர் விடுமாறு கற்பித்த அவள் தந்தையார் கண்ணுவ முனிவர் சகுந்தலையை விடப் பூஞ்செடிகள் பால் அன்பு மிக்கவரா யிருக்கின்றனரே எனக் கூறி வருந்துகின்றாள். சகுந்தலை காதல்நோயாற் பெருந்துன்புழக்கின்ற காலையில் அந்நோயின் காரணத்தைத் தெரிவிக்குமாறு வேண்டி, அது தெரிந்தால் அதற்கேற்ற மருந்து தருதல் கூடுமெனவும் மொழிந்திடு கின்றாள். துருவாசர் சகுந்தலைமேற் சினந்து வசைமொழி கூறிச் செல்வது கண்டு, உடன் அவர்பாற் பதைத்தோடிப்போய்,