சாகுந்தல நாடக ஆராய்ச்சி
L
89
அவரது சினத்தை ஆற்றி, அவ்வசை மொழிக்கு விடுதி பெற்றுத் திரும்புகின்றவளும் அனசூயை யாகவே யிருக்கின்றாள் (62, 63). துருவாசர் இட்ட வசைமொழி மிக மெல்லியளான சகுந்தலை கேட்டால் உயிர் தாங்காள் என நுவன்று, அதனை அவட்குத் தெரிவியாமல் மறைத்துவைக்கு மாறும் பிரியம்வதைக்குக் கற்பிக்கின்றாள். சகுந்தலையை மணந்து சென்ற அரசன் அவளை முற்றுமே மறந்துபோயது கண்டு அனசூயை நெஞ்சந் துடிதுடித்து வருந்துவதும், அவ்வருத்த மிகுதியால் அவள் நுவலுஞ் சொற்களும் இவள் சகுந்தலைமாட்டு வைத்த அன்பின் மிகுதியைத் தெரிக்கின்றன (65,66). கண்ணுவ முனிவர் சகுந்தலையைக் கணவனது இல்லத்திற்கு விடுக்கின்ற காலையில், அவடன் றோழிமார் இருவரும் அவளது பிரிவை ஆற்றாது வருந்தினராயினும், அனசூயையே அவடன் பிரிவின்றுயர் பொறாது பெரிது நைந்து அழுதாளாகல் வேண்டும். என்னை? கண்ணுவ முனிவர் அப்போது இவளை நோக்கியே, “அனசூயே, அழாதே, நீங்களல்லவோ சகுந்தலையை ஆற்றுதல் வேண்டும்" என்று தேறுதல் கூறினாராகலின் என்க. அனசூயை தன்மேல் அளவிறந்த அன்புடையளாயிருத்தலைச் சகுந்தலை நன்கு ணர்ந்தவள் என்பதற்குப், பிரியம்வதை தன் மார்பின்மேல் இறுக்கிக் கட்டிய ஆடையினை நெகிழ்த்தி விடும்படி அவள் அனசூயையைக் கேட்டுக்கொள்ளுதலே சான்றாகும். சகுந்தலையின் மென்மைத் தன்மையினை அனசூயை உணர்ந் தாற்போலப் பிரியம்வதை உணர்ந்திலாமை யினை உற்று நோக்குங்கால், அனசூயை பிரியம்வதையைவிட நுண்ணறி வுடையளாதலும், அதனால் அவள் அவளைவிடச் சகுந்தலையினிடத்து மிக்க அன்புடையளாதலுந் தெளியப் படும். பிரியம்வதை இடக்கர் மொழிகள் பேசுதல் கேட்டுச் சகுந்தலை நாணமுஞ் சினமுங் கொண்டு தன் குடிலுக்குச் செல்லப் புறப்படுகையிலும், அனசூயைக்குச் சொல்லியே புறப்படுகின்றாள். அப்போது அனசூயை அவளத சினத்தைத் தணிக்கச் சொல்லும் அருமை மொழிகள் சிலவாயிருப்பினும் அவை அன்பின் தேன் துளிகளாய் ஆறுதல் பயத்தல் கண்டு காள்க (21). இன்னுந், தன் அடியில் தருப்பைப் புல்லின் கூரிய முனை குத்தியதைச் சகுந்தலை அனசூயைக்கே காட்டு கின்றாள், முட்செடியின்மேல் அகப்பட்டுக்கொண்ட தனது