பக்கம்:மறைமலையம் 7.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் - 7

மரவுரியாடையினை எடுத்து விடுமாறும் அவளையே கேட்கின்றாள் (24,25). இங்ஙனம் அனசூயை தன்பால் வைத் துள்ள அன்பின் மிகுதியைக் கண்டு சகுந்தலை தானும் அவள் பாற் பேரன்பு கொண்டிந்தா ளாயினும், அதனை நிரம்பப் புலப்படுத்திக் கொள்ளாமற், பிரியம்வதையினிடத்தும் ஒத்த அன்பு காட்டி நடந்துகொள்ளும் நுட்பமும், அதனை உய்த் துணர வைத்திருக்கும் ஆசிரியர் காளிதாசரின் அறிவின்றிறனும் பெரிதும் பாராட்டற் பாலனவாகும் என்க.

இனிப், பிரியம்வதையோ சிறிது கள்ளம் அறிந்தவளாகக் காணப்படுகின்றாள். ஒரு தேமாமரத்தினைப் பிணைந்தேறிப் படர்ந்த மல்லிகைக் கொடியொன்றன் அழகினை உற்று நோக்கி வியந்துகொண்டிருந்த சகுந்தலை தானும் அக்கொடியைப் போல் ஒரு காதலனை மணக்கலாகுமாவெனக் கருதுகின்றாள் எனக் கூறுபவள் பிரியம்வதையே, அனசூயையோ அத்தகைய தோர் எண்ணம் சகுந்தலைக்கு உண்டென நினையாமலே வினவுகின்றாள் (13). “பாம்பின்கால் பாம்பறியும்" என்னும் பழமொழிக்கிணங்கச், சகுந்தலைக்கு ஒருகால் உள்ளதாகக் கருதக்கூடிய எண்ணத்தைப் பிரியம்வதை சொல்லியது கொண்டும், அதற்கு மறுமொழியாக, இதுதான் உன் உள்ளத்தில் உள்ள உண்மையான எண்ணம்" என்று சகுந்தலை மொழிந்தது கொண்டும் ஒருவர் நெஞ்சத்தை மற்றவர் நன்கறிந்திருந்த பான்மை புலனாகா நிற்கும்.

66

இன்னுஞ், சகுந்தலை தான் அரசன்மேற் கொண்ட பெருங் காதலைத் தன் றோழியர்க்குந் தெரிவியாமற் கழி பருந்துயர்கூர்ந்து கிடப்புழி, அதன் காரணங் காதலா யிருக்கலாமென்று முதன்முதல் உய்த்தறிந்துரைப்பவளும் பிரியம்வதையே. இவள் அதனை யெடுத்துரைத்த பின்னரே அனசூயையும் அஃதவ்வாறிருக்கலாமென ஐயுற்று மொழிகின்றாள் (47). மேலுஞ், சகுந்தலையை அவள் காதலுற்ற அரசன்பால் மறைவாகச் சேர்த்தற்கு வழியாது? என்று அனசூயை வினாயதற்கு ஏற்றதொரு சூழ்ச்சி செய்பவளும், அதன்பிற் சகுந்தலையை அரசன் பால் தலைப்படுவிக்கின்றுழி அனசூயையை அவ்விருவரினின்றும் அகற்றி ஒரு விரகால் அப்பால் அழைத்துச் செல்பவளும் பிரியம்வதையாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/115&oldid=1578244" இலிருந்து மீள்விக்கப்பட்டது