பக்கம்:மறைமலையம் 7.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

91

யிருக்கின்றாள். சகுந்தலையை அரசனிடஞ் சேர்ப்பிக்குங்கால் இவள் அரசனை நோக்கிக் கூறுஞ் சொற்கள் திறமை மிக்கனவாயிருக்கின்றன (53). இதனால் இவள் காலமும் இடமும் அறிந்து இன்னார்க்கு இன்னபடி பேசவேண்டு மென்னும் அறிவு வாய்ந்தவளா யிருத்தலுங் கண்டுகொள்க. பிரியம்வதை நுண்ணறிவும்

என்றாலும்,

பரந்த

வை

நோக்கமும் உடையவளாகக் காணப்படவில்லை. யிரண்டும் இல்லாமையாற் பிறரை ஆராய்ந்து பார்க்கும் அறிவாற்றல் இன்றி, அவர்களைச் சொல்லளவிலே நம்பி டுபவளா யிருக்கின்றாள். யாழோர் மணம் முடித்துச் சென்ற அரசனை நம்பாமல் அனசூயை அவனது மனநிலையில் ஐயுறவுகொண்டு வருந்தாநிற்கப், பிரியம்வதையோ அவனது மனநிலையை அறியற்கில்லாளாய், அவன் ஒரு காலுந் தவறானென்று நம்பிக்கையுடன் பேசுகின்றாள். இங்ஙனமே கண்ணுவ முனிவரது மனநிலையினையும் இவள் அறியாது மயங்கிக் கூற, அனசூயையோ சகுந்தலை கூடிய யாழோர் மன் றலை அம்முனிவர் ஏற்பரென உறுதி புகல்கின்றாள் (60). இன்னும், இவள் அனசூயையைப்போற் சுற்று நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளுங் கருத்து விழிப்பும் உடையவள் அல்லள். குடிலிற் றனியளாய்த் தன்னை மறந்திருந்த சகுந்தலையின்பாற் போந்த துருவாசர் வருகையினை உடனே அறிந்து அதற்கேற்றது செய்ய முனைந்தவள் அனசூயையே யல்லாற் பிரியம்வதை அல்லள் (61).

L

நேர்ந்தக்கால்

மனவமைதி

இன்னும், இடுக்கண் மேற்கொண்டு, அதனைத் தீர்க்குந்திறம் நுண்ணறிவுை யார்க்கன்றி, நுண்ணறிவில்லார்க்கு உளதாகாது; மேலும், நுண்ணறிவிலார்க்கு மனவமைதி யில்லாமையால் அவர் தாம் வழுக்கி வீழ்தலேயன்றியும், அவ்விடுக்கணையுந் தீர்க்க மாட்டுவார் அல்லர். பருவகால மழையாற் பெரு கி ஆழ்ந்த கன்று செல்லும் ஒரு பேரியாறுதான் வற்கடம் நீக்கிப் பைங்கூழை வளர்த்துப் பயன்றரக் காண்டுமல்லால், வேனிற்காலத்துச் சடுதியிற் பெய்யுஞ் சிறுமழையாற் சிலுசிலுவென்று ஓடிவிடும் ஒரு சிற்றாறு அங்ஙனம் வறட்சி மாற்றி வளந்தரக் காண்டு மில்லையே. அதுபோல, ஆழ்ந்தகன்ற அறிவினளான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/116&oldid=1578245" இலிருந்து மீள்விக்கப்பட்டது